"தமிழ்த் தேசியப் போராளி தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வரவு"--- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்
Tuesday, October 19, 2021
தமிழ்த் தேசியப் போராளி தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வரவு
=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்
====================================================
நாள்:19.10.2021
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி.கோவேந்தன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு கடந்த 25.8.2021 அன்று காலமானார். அவருக்கு அகவை 34. அவர் இளம் மனைவி செந்தாமரையையும் ஒரே அன்பு மகள் இளம் பிறையையும் பாதுகாப்பதற்காகத் தோழர் கோவேந்தன் குடும்ப உதவி நிதி கோரி 15.9.2021 அன்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். 15.10.2021க்குள் நிதி அனுப்புமாறு கோரியிருந்தோம்.
18.10.2021 உடன் இவ்வரவு நன்கொடைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.
கனரா வங்கியின் தஞ்சாவூர் தெற்கு வீதிக் கிளையில் திரு.பெ.மணியரசன் பெயரில் உள்ள சேமிப்புக் கணக்கிற்கு நிதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள இதரமாநிலங்கள், வெளிநாடுகள் ஆகியவற்றில் வாழும் தமிழ் இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவர்களும், சமூக அக்கறை மிகுந்தவர்களும் தொடர்ந்து நிதியளித்துப் பேராதரவு காட்டியுள்ளீர்கள்.
18.10.2021 வரை மேற்படி கணக்கில் தாங்கள் அளித்த மொத்த நன்கொடை ரூ.9,60,885-09. நன்கொடை அளித்தோர் பெயர்ப் பட்டியல் அவர்கள் அளித்த தொகை ஆகியவை நாளை வெளியிடப்படும்.
வங்கிக் கணக்கு விவரம்
கனரா வங்கி (Canara Bank)
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்: பெ.மணியரசன் (Maniyarasan P)
கணக்கு எண்: 63402200006500
கிளைக் குறியீட்டு எண் (IFSC Code) CNRB0001221
இக்கணக்கில் மேற்படி நன்கொடை
வரவுக்கு முன் இருந்த இருப்பு: - ரூ.290 – 00
18.10.2021 இல் இருக்கும் மொத்தத் தொகை: - ரூ.9,61,175 – 09
___________________________
கோவேந்தன் குடும்ப நிதி வரவு - ரூ.9,60,885-09
___________________________
பேரன்புடையீர்,
பேரன்புடனும், பொதுநல அக்கறையுடனும் தோழர் கோவேந்தன் குடும்ப உதவிநிதி அளித்த உங்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் செந்தாமரை, இளம்பிறை சார்பிலும் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை பெயர்ப் பட்டியலுடன் – நிதி வரவு வெளியிடப்படும்.
விரைவில் இத்தொகையில் ஒரு பகுதி இளம்பிறை எதிர் காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதியாக இளம்பிறையின் 19-ஆம் அகவையில் அவர் எடுக்கும் வகையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். செந்தாமரைக்கு உரிய நிதி – அவரிடம் நேரில் வழங்கப்படும். அந்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
அனைவர்க்கும் நன்றி!
===================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்