<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"வேளாண் சட்டங்கள் - கார்ப்பரேட் ஆரியம்!” “ழகரம்” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Wednesday, September 30, 2020

"வேளாண் சட்டங்கள் - கார்ப்பரேட் ஆரியம்!” 


“ழகரம்” ஊடகத்துக்கு..


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்!” Liberty Tamil ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!

Monday, September 28, 2020

“கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்!”


Liberty Tamil ஊடகத்துக்கு..  


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.!!” “ழகரம்” ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!

Sunday, September 27, 2020

“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.!!”


“ழகரம்” ஊடகத்துக்கு..  


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“தியாக தீபம் திலீபன்” -“தமிழி” இணைய ஊடகத்தில்.. ஐயா பெ. மணியரசன் உரை!

Saturday, September 26, 2020

“தியாக தீபம் திலீபன்”



“தமிழி” இணைய ஊடகத்தில்.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

“வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! - “வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! தோழர் பெ. மணியரசன் அவர்களின் பேச்சு!

Friday, September 18, 2020

வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த தொடர் மறியலின் இறுதி நாள் (18.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேச்சு! 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை

Wednesday, September 16, 2020



சூரியா அறிக்கை:
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு
“இந்து” நாளேடு தக்க பதிலடி!


பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

அகரம் அறக்கட்டளைத் தலைவர் நடிகர் சூரியா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சீறிப் பாய்ந்ததை மறுத்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிட்டது இன்று(16.09.2020) இந்து ஆங்கில நாளேடு!

அவ்வேட்டின் முதன்மை ஆசிரியவுரை செய்துள்ள சாட்டையடித் திறனாய்வுகளில் சில:

“கொரோனோ அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வெழுத ஆணை இட்டது” சரியல்ல என்ற சூரியாவின் விமர்சனம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான சில மணி நேரங்களில் முந்திக் கொண்டு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கடிதக் கணை பாய்ச்சினார். இதற்கான அவசரக் காரணத்தை நீதிபதி கூற வேண்டும்!

விமர்சனங்களை சகித்துக் கொள்ளாத நீதிபதியின் (எஸ்.எம்.சுப்பிரமணியம்) வேகம் மன்னராட்சியின் எதேச்சாதிகாரம் போல் உள்ளது.

சமூகத்தில் சிறப்பு வாய்ப்பற்றவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிடத் தனி அறக்கட்டளை வைத்துப் பாராட்டத் தக்க பணிகள் செய்து வருகிறார் அந்த நடிகர். எனவே அவர், மாணவர்களின் நலன் கருதி செய்த விமர்சனம் நீதி மன்ற அவமதிப்பு அல்ல! மேலும் அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை - பொது நலன் சார்ந்த கருத்துரிமையைப் பறிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அத்துடன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சூரியா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய விடுத்த வேண்டுகோளை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அனுமதிக்கக் கூடாது.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி செய்த விமர்சனத்தின் மீது, அவமதிப்பு வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பில்லை! உச்சநீதிமன்றம், விதுசா ஓபிராய் வழக்கில் 2017-இல் அளித்த தீர்ப்பே இதற்குச் சான்று!

எனவே சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாகி அவர்கள், சூரியாவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்க அனுமதிக்கக் கூடாது.

சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் வாதத்தில் சட்டதின் சாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் இந்து ஆசிரியவுரை கூறியுள்ளது.

இந்து நாளேடு கொடுத்துள்ள பதிலடி போதுமா?

கடைசியாக ஒரே ஒரு வினா: இந்த ஆசிரியவுரைக்கு இந்து ஏடு “மதியற்ற முன்னெடுப்பு”(Ill-advised move) என்று தலைப்புக் கொடுத்துள்ளது. நீதிபதியின் மதியை மறைத்தது எது? இந்து ஏட்டுக்குப் பாராட்டுகள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , , ,

“தமிழ்நாட்டிற்குத் தேவை இறையாண்மை” - ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

Tuesday, September 15, 2020

தமிழ்நாட்டிற்குத் தேவை இறையாண்மை”



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“தமிழ்தேசியம் பேசாத.! முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.!" பாயும் “ழகரம்” இணைய ஊடகத்துக்கு - ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

Sunday, September 13, 2020

தமிழ்தேசியம் பேசாத.! முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.!" பாயும் பெ.மணியரசன்



“ழகரம்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

“ செப்டம்பர் 11” தமிழ்நாடு தமிழர்க்கே முழக்க நாள்!“ - ஐயா,பெ.மணியரசன் உரை”

Friday, September 11, 2020

“  செப்டம்பர் 11” தமிழ்நாடு 

தமிழர்க்கே முழக்க நாள்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா,பெ.மணியரசன் உரை”




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“தமிழக மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்” - “ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழக மாணவர்கள்  திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்”


“ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

”தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா?” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, September 9, 2020



”தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில்
 சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், சமற்கிருதம் படிக்க இந்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவர் பட்டியலை எடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்ப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய படிவத்தில் (form 1, form 2) நிரப்பி 10.09.2020 மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மோடி அரசு இந்தியை மட்டுமின்றி சமற்கிருதத்தையும் சேர்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு மேற்கண்ட கடிதம் மற்றுமொறு சான்று. இந்தி மற்றும் சமற்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என்று போலியாக சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சமற்கிருதத்தைப் பணத்தாசை காட்டியும் திணிக்கிறது. இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

அத்துடன் இந்தி சமற்கிருதம் இரண்டையும் திணிபதன் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை ஆரியமயப் படுத்தும் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

தனது அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சமற்கிருதத் திணிப்பை ஆதரித்துத் தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சமற்கிருத திணிப்பு சுற்றறிக்கையை இரத்து செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

“ தகவல் அறியும் சட்டப்படி கேட்ட கேள்விக்கு, இந்தியில் விடை!“ - ஐயா,பெ.மணியரசன் ஆவேசம்!”

Friday, September 4, 2020

“ தகவல் அறியும் சட்டப்படி கேட்ட கேள்விக்கு, இந்தியில் விடை!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா,பெ.மணியரசன் ஆவேசம்!”




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

”பா.ச.க. பரவாமல் தடுக்கும் தத்துவம்!” - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Thursday, September 3, 2020



”பா.ச.க. பரவாமல் தடுக்கும் தத்துவம்!”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான (2021) முதலமைச்சர் வேட்பாளரை இப்போதே அறிவித்துவிட வேண்டும்; எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அ.இ.அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் சிலர் பேசினர். வேறு சில அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்கள்; முன்கூட்டியே முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கக்கூடாது என்றனர். திரைமறைவில் வளர்ந்து கொண்டிருந்த எடப்பாடி - ஓ.பி.எஸ். குழு மோதல் தெருவுக்கு வந்துவிட்ட பின் இருவரும் இடைக்காலப் போர் நிறுத்தம் அறிவித்துள்ளார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து இப்போது யாரும் பேசக்கூடாது; தக்க நேரத்தில் கழகம் முடிவு செய்யும் என்று அறிவித்துள்ளார்கள்.
கர்நாடகம், மத்தியப்பிரதேசம் இரண்டிலும் தேர்தலை எதிர்கொள்ளாமலே ஆளும் கட்சியைப் பிளவுப்படுத்தி, ஆட்சியைப் பிடித்தது பா.ச.க.! இராசஸ்தானில் ஆளும் காங்கிரசைப் பிளவுபடுத்திய பா.ச.க. கடைசியில் தோற்று விட்டது.
திராவிடப் பாசறையான தி.மு.க.விலிருந்து தாவி ஆரியப் பாசறையான பா.ச.க.வுக்கு அண்மையில் போன வி.பி. துரைசாமி, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ச.க. தலைமையில்தான் கூட்டணி” என்று அறிவித்தார். அடுத்து, பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றிபெறும்” என்று கூறினார். தமிழ்நாட்டில் பா.ச.க. வளர்ந்து விட்டது என்றார்.
ஓ. பன்னீர்ச்செல்வத்தை ஆதரித்து, துக்ளக் எழுதத் தொடங்கி விட்டது! “தர்ம யுத்தம் - 2”-ஐ ஓ.பி.எஸ். தொடங்குவார் என்று அது அட்டைப்படம் போட்டுள்ளது (02.09.2020). ஓ.பி.எஸ். மகன் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றது இரட்டை இலையில்; செயல்படுவது தாமரையில்! பா.ச.க. தலைமையுடன் உள்ள உறவைக் காட்டித்தான் எடப்பாடியை சமாளித்து வருகிறார் ஓ.பி.எஸ்!
தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பில் இருந்த வி.பி. துரைசாமி பா.ச.க.வில் சேர்ந்தததுடன், அக்கழகத்தின் சரிவு நிற்கவில்லை; தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளரும், தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.க. செல்வம் கரை வேட்டியை மாற்றி, காவி உடுத்தி பா.ச.க.வில் கலந்து விட்டார். பா.ச.க. வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன், தி.மு.க.விலிருந்து இன்னும் பல தலைவர்கள் பா.ச.க.விற்கு வர உள்ளனர் என்றும் வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் ( மாலை மலர் - 01.09.2020 ).
“இது பெரியார் மண்; இங்கு பா.ச.க.வின் இந்துத்துவா எடுபடாது” என்றெல்லாம் திராவிட வாய் வீச்சாளர்கள் பழைய பேச்சையே மீண்டும் மீண்டும் பேசி, புளிச்ச ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர்களின் பேச்சை நம்பி தமிழர்கள் ஏமாறப் போகிறார்களா?
ஒரு சமூகம் என்று எடுத்துக் கொண்டால் ஆரியரில் நேர்மையானவர்களே இல்லை என்று கூற முடியாது; அப்படிப்பட்டவர்கள் மிகமிகக் குறைவு! அதனால் தான் பெரும்பான்மையைக் கணக்கில் கொண்டு, ஆரியர்களுக்கு ஆன்மிக ஒழுக்கமோ, ஆண்டவன் மீது அச்சமோ இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம்! மற்ற சமூகத்தினரின் மன பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் இன்றுவரை அவர்கள் எசமானப் பதவியில் இருந்து வருகிறார்கள். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் பலவீனர்களுக்குப் பஞ்சமா என்ன?
குற்றச் செயல்களில் சிக்குண்டோர், கோடிகளைக் குவிக்க ஆசைப்படுவோர், அதிகாரத்தின் காலடியே காப்பாற்றும் என அண்டிப்பிழைக்கும் உளவியல் கொண்டோர், பதவிக் காமத்தில் பரிதவிப்போர் எனப் பலவகைப் பலவீனர்கள் பா.ச.க.வில் சேர்கிறார்கள்! பலவீனங்களால் பீடிக்கப்பட்ட இந்தத் தனிநபர்களை விட தமிழ்ச சமூகத்திற்கு ஆபத்தானவை - பா.ச.க,விற்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் சந்தர்ப்பவாதக் கட்சிகள்!
இப்போது அ.இ.அ.தி.மு.க. பா.ச.க. கூட்டணியில் இருக்கிறது. ஒரு வேளை - இக்கூட்டணி முறிந்தால் தி.மு.க. - பா.ச.க.வுடன் கூட்டணி சேரும் ஆபத்து உண்டு! ஏற்கெனவே 1999 முதல் 2004 வரை பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து, அதன் நடுவண் அமைச்சரவையில் பங்கு வகித்தது தி.மு.க.! பா.ம.க. இப்பொழுது பா.ச.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தே.மு.தி.க.வும் 2019 தேர்தலில் இருந்து பா.ச.க. கூட்டணியில் தான் இருக்கிறது. ம.தி.மு.க. 2014 மக்களவைத் தேர்தலில் பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்தது.
பா.ச.க. பாசிசம் ஓர் ஆட்டம் ஆடித்தான் வீழும்! அதை வீழ்த்தும் ஆற்றல் பல்வேறு மாநிலக் கட்சிகளின் எதிர்ப்போராட்டங்களில் அடங்கியுள்ளது. இந்தியாவின் பன்மை இன அடையாங்களை வேகமாக அழித்து வரும் மோடி ஆட்சிக்கு எதிராக - மண்ணின் இனம் சார்ந்தும், சமூகங்கள் சார்ந்தும் செயல்படும் கட்சிகள் போராடும் சூழல் அதிகரித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை மலிவாக ஏலம் விட்டுக் கொண்டுள்ள மோடி அரசின் பொருளியல் கொள்கை எல்லாத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வீழ்த்திக் கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் மக்கள் எதிர்ப்பு எழுச்சி பெறும். அப்போது மோடியின் ஒற்றை சர்வாதிகாரத்தை எதிர்த்து உட்கட்சிப் பூசல் வெடிக்கும்.
ஏனெனில் கூட்டுத் தலைமையாக உட்கட்சி சனநாயகத்திற்கு உரிய முகாமை கொடுத்து இயங்கி வந்த பா.ச.க.வை ஒரு நபர் ஏதேச்சாதிகாரக் கூடாரமாக மாற்றிவிட்டார் மோடி!
அந்நிலையில் தமிழ்நாடு எப்படி இருக்கும்? அடிப்படை மனித உரிமைகளையும் - சனநாயக உரிமைகளையும் பறித்து 1975 - 1976 இல் இந்திராகாந்தி நெருக்கடி நிலை என்ற சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தியபோது தமிழ்நாடு எப்படி இருந்தது? தி.மு.க. நெருக்கடி நிலையை எதிர்த்தது; அ.இ.அ.தி.மு.க. நெருக்கடி நிலையை ஆதரித்தது. நெருக்கடி நிலையைக் கைவிடாமல் அதைக் கொஞ்சம் தளர்த்தி 1977 மார்ச் மக்களவைக்கான பொதுத் தேர்தலை இந்திரா காந்தி நடத்தினார். வெற்றிபெறுவோம் என்ற மிகை நம்பிக்கையில் தேர்தல் நடத்தினார். வடநாட்டில் இந்திரா காங்கிரசு படுதோல்வி அடைந்தது. ஆட்சியை இழந்தது காங்கிரசு! இந்திரா காந்தியே தமது தொகுதியில் தோற்றுப் போனார். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு தமிழ்நாட்டில் பெருவெற்றி கண்டது.
எனவே, தமிழ்நாட்டில் பா.ச.க. தலையெடுக்க முடியாது என்ற இறுமாப்பில் தமிழர்கள் இருக்கக் கூடாது. பாசிச பா.ச.க.வுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகள் இருக்கும். பா.ச.க. தலையெடுக்காமல் தடுக்கும் சனநாயக வழிகளைத் தமிழர்கள் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். இந்துத்துவா என்ற போலித் தத்துவம் மற்றும் புரட்டு நடைமுறைகள் என்ற இருமுனைகளைக் கொண்டுள்ளது.
பா.ச.க. இந்துத்துவா என்பது ஆரிய மேலாதிக்கவாதம் கொண்ட புதிய வர்ணாசிரம தர்மம் தவிர வேறல்ல! அதை எதிர்கொள்ளத் தமிழ்த்தேசியம் என்ற தத்துவத்தைத் தமிழர்கள் ஏந்த வேண்டும். ஆரிய இனவாதத்தை முறியடிக்கும் ஆற்றல் தமிழ்நாட்டில் தமிழினத் தத்துவத்திற்கு மட்டுமே உண்டு!
திராவிடம் என்பது ஆரியம் உருவாக்கிய சொற்கோவை! ஆரியத்தின் கையடக்கப் பதிப்பு தான் திராவிடம்! திராவிடம் என்ற பெயரில் ஓர் இனமோ, ஒரு மொழியோ, ஒரு நாடோ இருந்ததில்லை. திராவிடம் என்பது ஆரியக் கற்பனை! ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடப்பது பங்காளிச் சண்டை! ஆரியத்திற்கும் தமிழர்களுக்கும் இடையே நடப்பது பகையாளிச் சண்டை!
மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் என்பது மாய்மாலப் பேச்சு! இந்துமதத் தீவிரவாதத்தின் மேல் கட்டப்பட்டதுதான் இந்தியத்தேசியம்! இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதே ஆரியத்துவாவாதிகள் இந்த நோக்குடன் இந்தியத்தேசியத்தைக் கட்டமைத்தார்கள்.
இந்து மதத்தைப் பயன்படுத்தி, இந்தியாவை ஒரு தேசமாகக் கற்பனை செய்து, இந்தியத் தேசியத்தை உருவாக்கியவர்கள் ஆரியத்துவாவாதிகளே! இந்துதான் ‘இந்தியன்’ என்று புதிய தேசிய இனத்தைக் கற்பித்தார்கள். இந்துதான், இந்தியன் மற்ற மதத்தவர்கள் வெளியார் என்று இப்போது கற்பிக்கிறது பா.ச.க.! இந்தியா என்பது ஆங்கிலேய வணிக வேட்டையாடிகள் தங்கள் பீரங்கிகளால் உருவாக்கிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு என்ற புரிதலில் தெளிவும் உண்மையும் உள்ளவர்களால் மட்டுமே இந்துத்துவா என்கிற ஆரியத்துவாவும் பா.ச.க.வும் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க முடியும். இடதுசாரிகள் இந்தியத்தேசியத்தை முன் நிபந்தனையாக்கிக் கொண்டு பா.ச.க.வின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்தில், சி.பி.எம். கட்சியினர் - பிரமுகர்கள் உட்பட பா.ச.க.வில் இணைகிறார்கள் என்பதே இதற்குச் சான்று.
“இந்துத்துவா இந்தியத்தேசியத்தை” உருவாக்கிய முதல் அரசியல் கட்சி காங்கிரசு! இப்போதும் அது பாபர் மசூதித் தகர்ப்பு, அதே இடத்தில் இராமர் கோயில் எழுப்புதல், சம்மு - காசுமீர் உரிமைப்பறிப்பு, சமற்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, ஒரே தேச முழக்கம், மாநில உரிமைப் பறிப்பு போன்றவற்றில் சுற்றி வளைத்தோ அல்லது நேரடியாகவோ பா.ச.க.வுடன் இணைந்து செல்கிறது காங்கிரசு!
இந்தியத் தேசியத்தை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கும் இடதுசாரிகளும் காங்கிரசாரும் பா.ச.க.வின் இந்துத்துவா என்ற தத்துவத்திற்கு மாற்றுத் தத்துவத்தை வழங்க முடியாது. திராவிடவாதத்தின் தந்தையாக விளங்கும் பெரியார் இந்துத்துவா வர்ணாசிரமத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். ஆனால் மாற்று தேசியத்தையோ, மாற்றுத் தத்துவத்தையோ முன்வைக்கவில்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கருத்துகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அது ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கான தனித்துவமான தத்துவமில்லை.
தமிழ்நாட்டில் பா.ச.க. பரவாமல் தடுக்கும் தத்துவம் தமிழ்த்தேசியம்தான்! இந்தியா ஒரு தேசமல்ல; தமிழ்நாடு ஒரு தேசம் என்கிறது தமிழ்த்தேசியம்! தமிழர் ஆன்மிகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆரிய ஆன்மிகத்தை எதிர்த்து வந்த இலக்கியச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன.
ஆங்கிலேயர் சிந்து ஆற்றை அடையாளப்படுத்தி சூட்டிய இந்து மதம் என்ற பெயர்ப் பொதுமை இருந்தாலும் ஆரிய இந்து வேறு; தமிழ் இந்து வேறு என்கிறோம். ஒற்றைக் கடவுள், ஒற்றைப் புனித நூல் கொண்ட கிறித்துவத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆர்.சி. மற்றும் புராட்டஸ்டண்டு பிரிவுகள் இருக்கின்றன. அதேபோல் இஸ்லாத்தில், பகை கொண்டு மோதிக் கொள்ளும் சன்னி - சியா பிரிவுகள் இருக்கின்றன. எனவே தமிழ் இந்துக்கு ஆரியத் தலைமையோ, ஆரியத் தொடர்போ இல்லை என்பதில் எந்தத் தடையும் இல்லை. இந்து மத்திற்கு என்று ஒற்றை தெய்வமோ, ஒற்றைப் புனித நூலோ, ஒற்றைத் தலைமையோ இல்லை. தமிழ் மக்கள் நடைமுறையில் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்து மத மறுப்பையும் கடவுள் மறுப்பையும் தமிழ்நாட்டு வெகுமக்கள் ஏற்கமாட்டார்கள். பெரியாரின் இந்துமத எதிரப்பும் கடவுள் மறுப்பும் ஒரு பகுதிச் செயல்வீரர்களுக்கு ஏற்புடையது. அந்த ஏற்பு வெகுமக்களுக்கு அல்ல! அதனால் தான், பெரியாரை விட்டுப் பிரிந்த அண்ணா, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமூலர்க் கொள்கையே தன் கொள்கை என்றார்.
கடவுள் ஏற்பும் கடவுள் மறுப்பும் அவரவர் உரிமை! இவ்விரு பிரிவாரும் ஒருவரையொருவர் இழிவுபடுத்திக் கொள்ளாமல் தம் தம் கருத்துகளை மக்களிடம் முன்வைக்கலாம். தமிழ் இந்துவுக்கும் ஆரிய இந்துவுக்கும் இணைப்பில்லை. தமிழ்ச் சைவ, வைணவ நெறிகள் பிராமணியத்தைப் புறந்தள்ளுபவை என்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன் வைக்கும் தமிழ்த்தேசியம்!
மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்கிறது நாம் முன் வைக்கும் தமிழ்த்தேசியம்!
பா.ச.க.வின் ஆரிய இந்துத்துவா தத்துவத்திற்கு மாற்றுத் தத்துவமாகத் தமிழ்த்தேசியம் அமைகிறது. தமிழர் அறம் மனிதகுல மேன்மைக்குரிய நடைமுறைக் கோட்பாடாகும்.
தமிழ்நாட்டில் பா.ச.க. பாசிசம் பரவாமல் தடுப்பதற்கான சரியான தத்துவ முழக்கம் தமிழ்த்தேசியமே என்பதை இடதுசாரி மற்றும் திராவிடப் பற்றாளர்கள் சிந்திக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்