<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

புயல் பேரழிவிலிருந்து மீள்வோம்! துயர் துடைப்பு பணிகளில் களம் இறங்குங்கள்! பெ. மணியரசன்

Tuesday, November 20, 2018

புயல் பேரழிவிலிருந்து மீள்வோம்! 
துயர் துடைப்பு பணிகளில் களம் இறங்குங்கள்! 

தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


இயற்கையின் சீற்றம் இவ்வளவு கொடுமையாகத் தமிழர் தாயகத்தை அடிக்கடி தாக்குவதேன்? இயற்கையோடியைந்து இயற்கையை வணங்கி வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் வழங்கியவர்கள் தமிழ் மன்னர்கள். 

ஆழிப்பேரலை (சுனாமி), வர்தா, ஒக்கி, கசா புயல்கள் என அடுத்தடுத்து தமிழ் மக்கள் இயற்கைப் பேரழிவுகளுக்கு உள்ளாவது மிகவும் வேதனையாக உள்ளது. உலகத்தில் எங்கு இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும் அது மனித குலத்திற்கு ஏற்படும் பேரழிவு என்று அத்துயரில் பங்கு கொண்டு, இயன்ற துயர்த்துடைப்புப் பணிகள் செய்து வந்துள்ளோம். அது மனிதக் கடமை!

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் நவம்பர் 15ஆம் நாள் வீசிய கடும் புயல் வீடுகளை தகர்த்து, தென்னை – தேக்கு உள்ளிட்ட மரங்களை அழித்து, நெல் – வாழை – கரும்பு - கொடிக்கால் போன்ற பயிர்களை நாசப்படுத்தி, திடீரென்று நம் மக்களை சொந்த மண்ணிலேயே ஏதிலிகள் ஆக்கிவிட்டது. மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்ததால் மின்சாரம் இல்லை! குடிக்கத் தண்ணீர் இன்றி மக்கள்படும் துயரத்தைக் கேள்விப்படும் போது நெஞ்சுப்பதைக்கிறது.

வடஅமெரிக்கத் தமிழர்கள் அழைப்பின் பேரில் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நான், இங்கு சிக்கிக் கொண்டதால் நம் மக்களின் துயரங்களில் நேரிடையாகப் பங்கு கொண்டு துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட முடியாத அவல நிலையில் உள்ளேன்.

வட அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்நாட்டின் புயல் துயர்துடைப்புப் பணிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.

புயலுக்கு முந்தைய தற்காப்புப் பணிகளில் சரியாகச் செயல்பட்ட தமிழ்நாடு அரசின் பணிகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் பேரழிவு நடந்த பின், உணவு, தண்ணீர் அளித்தல், மின்சாரம் மீட்டல், விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் போன்றவற்றில் உரியவாறு விரைந்து செயல்படவில்லை என்ற செய்தி வேதனை தருகிறது. 

புயல் பாதிக்காத மற்ற மாவட்டங்களில் உள்ள மனிதவளம், மின்னாக்கிக் கருவிகள் (ஜெனரேட்டர்கள்) உள்ளிட்ட பல வசதிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இறக்கித் துயர்துடைப்புப் பணிகளைப் போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். மக்களுக்கு மூன்று வேலை உணவளிக்க வேண்டும். தமிழ் மக்கள் தன்னார்வமாகக் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவ வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் துயர்த் துடைப்புப் பணிகளில் இறங்கியுள்ளார்கள். நேற்று (19.11.2018), தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள், திருவாரூர் – நாகை மாவட்டங்களில் புயல் பாதித்தப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் குறித்து அறிக்கை தயாரித்து வருகின்றனர். எல்லாப் பகுதிகளிலும் உள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் புயல் துயர் துடைப்புப் பணிகளில் உடனடியாகக் களம் இறங்க வேண்டும்.

இயற்கைச் சோதனைகளை வென்று தலை நிமிர்வோம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். வாழ்த்துகள்! 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்