"பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற அலட்சியத்தால் உயிரிழந்தாரா?" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
Friday, October 28, 2016
==========================================
பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற
அலட்சியத்தால் உயிரிழந்தாரா?
==========================================
தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்!
==========================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை !
==========================================
பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற
அலட்சியத்தால் உயிரிழந்தாரா?
==========================================
தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்!
==========================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை !
==========================================
கடந்த 24.10.2016 அன்று, அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்
து. மூர்த்தி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்து, இரங்கல்
அறிக்கை அளித்தேன்.
தற்போது, தோழர் மூர்த்தி அவர்கள் அலிகர்
பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் உயிரிழக்க
நேர்ந்தது என்று வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும்
அளிக்கிறது.
கடந்த 23.10.2016 அன்று காலை அம்மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டது. மூர்த்திக்கு அன்று மாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து
வயிற்றுக் கட்டியை அகற்றியிருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலை 9 மணிக்கு
அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கிறது
என்றும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர்.
சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் உடனடியாக வரவில்லை. காலதாமதமான பின்
அங்குள்ள தமிழர்கள் முயற்சியால் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்துள்ளார்.
அவர் உயர் சிகிச்சை அளிக்க தில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளார். அதற்கான ஆம்புலென்ஸ் மற்றும்
மருத்துவர்கள் ஏற்பாடு செய்ய மிகவும் காலதாமதமாகி இரவு 7மணிக்கு மேல்
ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
காலையிலிருந்து சிறுநீர் பிரியாமல்
துன்பப்பட்ட பேரா. மூர்த்தி மிகவும் உடனடி சிகிச்சை அளிக்காமல் மிகவும்
காலதாமதமாக ஆம்புலன்சில் ஏற்றிய போது இறந்து விட்டார். மாரடைப்பால்
இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்கள்.
அலிகரிலிருந்து 2.30 மணி நேர
பயணமுள்ள தில்லி உயர் மருத்துவமனைக்கு கொண்டு போகாமல் பல மணி நேரம்
தாமதப்படுத்தியதால் பேரா. மூர்த்தி அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்
விட்டது. தமிழர் என்பதால் இந்த அலட்சியமா?
தமிழ்நாடு அரசு, உடனே தலையிட்டு அலிகர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரித் தலைமையிடம் அறிக்கை கோரவேண்டும்.
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்