"அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!" தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
Tuesday, February 14, 2017
அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும்
இளங்கோவடிகள் கூற்று
இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!
========================== ===============
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகள் கூறிய கூற்று, இன்று (14.02.2017) மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் கொள்ளை வழக்கில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏற்கெனவே நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு அப்படியே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதன் பொருள், செயலலிதாவும் குற்றவாளிதான் என்பதாகும்.
தமிழ்நாட்டில் சர்வாதிகார அரசியல் - குடும்ப அரசியல் – கொள்ளை அரசியல் முடிவுக்கு வந்து, உண்மையான சனநாயக அரசியல், அறம் சார்ந்த அரசியல் மலர அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டால், இத்தீர்ப்பின் பலன் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் சிறந்த புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும்.
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்