<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மோடியின் உலகக் குடும்பம் (வாசுதைவ குடும்பகம்) ஆரிய நால்வருணக் குடும்பமா..?" ---- பெ.மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, December 13, 2022


மோடியின் உலகக் குடும்பம் (வாசுதைவ குடும்பகம்)

ஆரிய நால்வருணக் குடும்பமா..?

====================================================
-பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================================


இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இப்பொழுது அடிக்கடி உலகம் ஒரே குடும்பம் (வாசுதைவ குடும்பகம்) என்ற சமற்கிருத சுலோகத்தைக் கூறி வருகிறார். இக்கூற்று இயற்கை அமைப்புக்கு எதிரானது.

உலகம் ஒரே குடும்பம் அன்று; உலகத்தில் பல குடும்பங்கள் இருக்கின்றன. பல குடும்பங்கள் என்று சொல்வதன் பொருள், பல இனங்கள் – பல மொழிகள் – பல தாயகங்கள், பல பண்பாடுகள் இருக்கின்றன. உலகம் ஒற்றைத் தன்மை உடையதன்று; பன்மைமயமானது!

இந்தப் பன்மைகளுக்கிடையே நல்லிணக்கம் தேவை; ஒற்றுமை தேவை! ஆனால், ஆரியத்துவா சொல்லும் “ஒரே குடும்பம்” என்பது மற்ற இனங்கள் ஆரியத்துக்குள் அடங்கி தங்கள் தனித்தன்மையை இழந்துவிடும் ஒருமையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

மனிதர்களை மேல் - கீழ் – தீண்டத்தகாதவர்கள் என்று பலவகையாகப் பிரித்து இழிவுபடுத்திய ஆரிய ஆன்மிகம் ‘வாசுதைவ குடும்பகம்’ (ஒரே குடும்பம்) என்று பேசுகிறது என்றால் அதில் சூழ்ச்சி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பழைய சனாதன பிராமணியத்தை இந்துத்துவா என்ற பெயரில் அனைத்து வகை மக்கள் மீதும் திணித்து வருகிறது பாசக என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை “ஒரே தேசம்-ஒரே மொழி-ஒரே பண்பாடு” கொண்டதாக மாற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஸூம், பாசக வும் கூறுகின்றன. ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை என்கின்றன! இந்தியாவில் உள்ள பல இன, பல மொழி, பல தாயக, பல பண்பாட்டுத் தனித்தன்மைகளை அழித்து, ஆரிய பிராமண, ஆரிய வைசியத் தலைமையிலான ஒரே பாரத்தீயர் என்று மாற்ற வேண்டும் என்பது மோடி அரசின் கொள்கை. அதில் ஆதிக்கம் செய்வோர் மற்றவரைச் சுரண்டுவோர் ஆரியப் பிராமணர்களும், ஆரிய வைசியர்களும் ஆவர்.

ஓநாய் ஒன்று, காட்டில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுதான் என்று கூறினால் என்ன பொருள்? “இந்த உயிரினங்கள் அனைத்தும் என் வயிற்றுக்குள் ஒருமை காணட்டும்” என்பதுதான் இதன் பொருள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இருக்கும் பன்மையை ஏற்கிறது; மதிக்கிறது. இந்தப் பன்மைகளுக்கிடையே சம உரிமை பேணப்பட வேண்டும் என்கிறது. “தமிழ்த்தேசியத்தின் பன்மை” என்ற நூலை நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்கள் இருக்கின்றன; மற்ற மொழிகள் பேசும் மக்கள் இருக்கின்றனர். நம் அனைவருக்குமான தாயகம் தமிழ்நாடு. நமக்கான தேசம் தமிழ்த்தேசம். எனவே தமிழ்த்தேசம் பன்மை கொண்டது. பலபிரிவினரும் ஏற்கத்தக்கது. நம் அனைவருக்குமானது.

இந்தியா ஒரே தேசமன்று; பல தேசங்களைக் கொண்டது. எனவே இந்தியத் தேசியம் என்பதை நாம் ஏற்கவில்லை.

திராவிட நாடு என்றோ, திராவிட மொழி என்றோ உலகத்தில் என்றுமே இருந்ததில்லை. எனவே நாம் திராவிடத்தையும் ஏற்கவில்லை.

மேற்சொன்ன இல்லாத தேசியங்கள், இல்லாத பொதுப் பண்பியல் இரண்டையும் தவிர்த்துவிட்டு மற்ற சமூகவியல் நோக்கங்களோடு தமிழ்நாட்டில் மார்க்சியம், காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசுவோரையும் தமிழ்த்தேசியத்தின் கூறுகளாகவே தமிழ்த்தேசியப் பேரியக்கம் பார்க்கிறது; அவர்களோடு உறவு கொள்கிறது. அவர்கள் தங்கள் தேசியம் தமிழ்த்தேசியம் என்று இயற்கையை ஏற்க வேண்டும்.

“உலகம் ஒரே குடும்பம்” என்று உபதேசிக்கும் மோடி, நம்முடைய கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் வரியையும் சேர்த்துச் சொல்கிறார். இந்தப் பாடலே பன்மைகளுக்கிடையே ஒற்றுமையை விரும்பும் கருத்துக் கொண்டதுதான்.

என் ஊர் எனக்குப் பெரிது, அதே போல் உன் ஊர் உனக்குப் பெரிது, அதை நான் மதிக்கிறேன். என் இருப்பு எனக்கு; உன் இருப்பு உனக்கு! ஆனால் நீயும் மனிதன் நானும் மனிதன் என்ற சமநிலையை, மனித உறவைப் பேணுகிறேன்.

அதேபோல், தீதும் நன்றும் மனித இயற்கை; வாழ்வின் பன்மை. வாழ்தல் – சாதல் என்ற எதிரெதிர் முனைகளும் கொண்டதே உலகம்! இவ்வாறு மெய்யியல் நோக்கில் உலகப் பன்மையை எடுத்துரைத்தார் பூங்குன்றன். அதே வேளை, அவர்தம் பெயரை பூங்குன்றம் (இப்போது மகிபாலன் பட்டி – சிவகங்கை மாவட்டம்) என்ற தம் ஊரின் பெயரால் வைத்துக் கொண்டார். ஊரை மறக்காமல் உலகத்தை மதித்தவர் கணியன் பூங்குன்றனார்.

உலகம் ஒரு குடும்பம் என்ற உபதேசம் மற்ற இனங்களின் தாயகங்களின், மொழிகளின், பண்பாடுகளின் தனித்தன்மைகளைத் தின்று செரித்து ஒரே ஆரியத்தலைமைக்குள் மற்றவர்களை அடிமையாக்கும் சூழ்ச்சி என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓநாய்கள் எச்சரிக்கை!

==========================================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்