<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழர் எதிர்ப்புணர்ச்சி கொண்ட கர்நாடக பா.ச.க. தலைவர் சங்கரமூர்த்தியை தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது! " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, December 24, 2016

========================================
தமிழர் எதிர்ப்புணர்ச்சி கொண்ட
கர்நாடக பா.ச.க. தலைவர் சங்கரமூர்த்தியை
தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது! 
========================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
========================================

கர்நாடகத்தின் பா.ச.க. தலைவர்களில் ஒருவராகவும், கர்நாடக சட்ட மேலவையின் தலைவராகவும் இருக்கின்ற டி.எச். சங்கரமூர்த்தி, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன.
அண்மையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட ஆணையிட்டபோது, அதை எதிர்த்து பெங்களூரில் - சட்டமன்றம் மற்றும் சட்டமேலவை கூட்டுக் கூட்டம் 23.09.2016 அன்று நடந்தது. அக்கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்ற தீர்மானத்தை வழிமொழிந்தவர், இதே சங்கரமூர்த்தி ஆவார். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என உறுதியெடுத்துக் கொண்டு, பா.ச.க. சார்பில் ஏற்கெனவே அமைச்சராக இருந்ததுடன், இப்போது சட்டமேலவைத் தலைவராகவும் இருக்கின்ற சங்கரமூர்த்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்ற தீர்மானத்தை வழிமொழிந்தது – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்!

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில், காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியபோது, கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த சங்கரமூர்த்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை – கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனக் கூறி  வெளிப்படையாகவே கண்டித்தார்.

அத்துடன், கன்னட இனவெறியும் தமிழின எதிர்ப்புணர்ச்சியும் கொண்டுள்ள சங்கரமூர்த்தியை, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்துவது நரேந்திர மோடி அரசு, சட்டப்படியான தமிழர் உரிமைக்கு எதிராக போர் தொடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தமிழர்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவர், தமிழ்நாட்டின் ஆளுநராக அமர்த்தப்படுவது, தமிழ்நாட்டில் தொடர்ந்து நிர்வாகச் சிக்கலை உருவாக்கும். ஆளுநரே பிரச்சினைக்குரிய நபராக மாறிவிடுவார்.
காவிரிச் சிக்கல் கர்நாடகம் – தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே வெகு மக்கள் போராட்டங்களை உருவாக்கியுள்ள நிலையில், கர்நாடகத்திலிருந்து ஒருவரை தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அமர்த்துவது, பா.ச.க. அரசு தமிழர்களை தண்டிக்க விரும்புகிறது என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது!

எனவே, இந்திய அரசு சங்கரமூர்த்தியை தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு கட்சிகளும் உழவர் அமைப்புகளும் கர்நாடக பா.ச.க. தலைவர் சங்கரமூர்த்தியை தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தும் திட்டத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்