“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” -- சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!
Monday, February 27, 2017
=================================
தோழர் பெ. மணியரசன் எழுதிய...
=================================
“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை
வளர்த்ததா? வழிமாற்றியதா?”
=================================
சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” - நூலின் அறிமுக விழா, சென்னையில் சிறப்புற நடைபெற்றது.
நேற்று (பிப்ரவரி 26) ஞாயிறு மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெற்று நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னதாக, தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி வரவேற்றார்.
சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் முதல்படி பெற்றுக் கொண்டார். பின்னர், மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் த. மணி, ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோர் நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிறைவில், நூலாசிரியரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் தோழர் செ. ஏந்தல் நன்றி கூறினார்.
அரங்கம் நிரம்பிய கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
Labels: திராவிடம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்