<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தஞ்சை திரிகடுகம் இரவி அவர்கள் திடீர் மறைவு பெருந்துயரம்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

Monday, November 11, 2024


தஞ்சை திரிகடுகம் இரவி அவர்கள்

திடீர் மறைவு பெருந்துயரம்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
==================================


தமிழ், தமிழர் மறுமலர்ச்சி, தமிழர் ஆன்மிகம், மரபுவழி மருத்துவம் என்று பல துறைகளில் உள்ளோரின் அன்பு நண்பரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சைத் தோழர்களின் அன்புத் தோழமையுமான ஐயா எம்.ஆர்.வி. இரவி என்கிற குமரேசன் அவர்கள் 10.11.2024 இரவு தஞ்சை மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற கொடிய செய்தி இன்று (11.11.2024) முற்பகல் வந்தது. பேரதிர்ச்சி அடைந்தேன். சொல்லொணாத் துயருறுகிறேன்.

பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் தஞ்சையில் நடந்தால் அங்கே நண்பர் இரவி திரிகடுக பானம் – சுடச்சுட தேநீருக்கு மாற்றாக அனைவர்க்கும் வழங்குவார், கட்டணமின்றி அன்பளிப்பாக! அப்படித்தான் நண்பர் இரவி அவர்களின் நட்பு எனக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கும் ஏற்பட்டது. திரிகடுகம் இரவி என்றே அழைக்கப்பட்டார்!

அண்ணன் த. வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையில் தஞ்சை மாநகரச் செயலாளராகப் பணியாற்றினார். மரபுவழி சித்த மருந்துகளும் மற்ற பொருட்களும் விற்கக்கூடிய சிறப்பான கடையை, தஞ்சை மருத்துவக் கல்லூரிச் சாலையில் சுறுசுறுப்பாக நடத்தி வந்தார். மகள் கலைமகளை இயற்கை மருத்துவர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார்.

வள்ளலார் கொள்கைகளைப் பின்பற்றும் இரவி அவர்கள் தஞ்சை வள்ளலார் பணியகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அறுபது அகவைதான் இருக்கும். அதற்குள் திடீர் மாரடைப்பு! ஐயா திரிகடுகம் இரவி அவர்களை நாம் இழந்துவிட்டேம். இரவி அவர்கட்கு வீரவணக்கம்!

திரிகடுகம் இரவி அவர்களின் இல்லத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று (11.11.2024) மாலை 3 மணியளவில் இறுதி ஊர்வலம் என்று தெரிவித்துள்ளார்கள்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்