"கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சாவுகள்: மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடவேண்டும்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
Thursday, June 20, 2024
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சாவுகள்:மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடவேண்டும்!
====================================================+
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
=====================================================
கள்ளக்குறிச்சியில் பெரும் எண்ணிக்கையில் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்துள்ளன. 20.6.2024 அன்று மாலை 4 மணிவரை 38 பேர் இறந்துள்ளார்கள்; 102 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.
கள்ளக்குறிச்சியில் காவல்நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை வீடுகள் இருக்கின்றன. அங்குள்ள கண்ணுக்குட்டி, கோவிந்தராசு, தாமோதரன் ஆகியோர் வீடுகளில் தாராளமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள்ளச்சாராயம் விற்று வருகிறார்கள் என்று அதே கருணாபுரத்தில் உள்ளோர் தொலைக்காட்சி நேர்காணல்களில் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சாராயக் கடைகளில் மதுகுடித்துப் பழக்கப்பட்டவர்கள், அங்கு மதுவிலை உயர்ந்துவிட்டதால் மலிவு விலையில் கருணாபுரம் கள்ளச் சாராய வீட்டில் வாங்கிக் குடித்து வந்தார்கள். இங்கு ஒரு பிளாஸ்டிக் பாக்கெட் சாராயம் ரூ.60.00. டாஸ்மாக்கில் ஒரு போத்தல் ரூ140.00 என்கிறார்கள். அதாவது டாஸ்மாக்கில் குடித்துப் பழகியவர்கள், போதிய பணம் இல்லாததால் கள்ளச் சாராயம் குடித்து குடி வேட்கையைத் தணித்துக் கொண்டனர். போதை அதிகமாக வேண்டும் என்பதற்காகக் கள்ளச் சாராய விற்பனை மன்னர்கள், எத்தனால் என்ற போதை இரசாயனத்தை அதிகமாகக் கள்ளச் சாராயத்தில் கலந்து விற்றுவந்தார்கள். இது அளவுக்கதிகமாகச் சேர்க்கப்பட்டதால், நஞ்சாகி கள்ளக்குறிச்சியில் குவியலாக இறப்புகள் நடந்துவிட்டன என்கிறார்கள்.
இவ்வளவு வெளிப்படையாகக் கள்ளக்குறிச்சி நகரத்தில் கள்ளச் சாராயம் இரண்டாண்டுகளாக விற்கப்படுவது காவல் துறைக்கும், மாவட்ட வருவாய்த் துறைக்கும் தெரியாமல் நடக்காது. ஆளுங்கட்சியின் உள்ளூர்க் கேப்டன்கள் ஆதரவுடன்தான் நடந்திருக்க வேண்டும். திமுகவைச் சேர்ந்த மதுஅருந்தாத நல்லவர்கள் அப்பகுதி அமைச்சர்கள் கவனத்திற்கு இந்தக் கள்ளச் சாராய வாணிகத்தைக் கொண்டு சென்றிருப்பார்கள். மேலிருந்து கீழ்வரை ஆளும் கட்சியின் பாதுகாப்பு அரண்களோடுதான் இரண்டாண்டுகளாக அங்கு கள்ளச் சாராய விற்பனை இரவு பகலாக நடந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போது மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியரை மாற்றியுள்ளார். ஆனால், காவல்துறை அமைச்சகத்தைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது என்ன நடவடிக்கை? யார் எடுப்பது? தமது குற்றத்தை உணர்ந்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பதவியிருந்து விலக வேண்டும். திமுகவின் சட்டமன்றக் கட்சி வேறொரு முதலமைச்சரைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதேபோல் மதுவிலக்குத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முத்துசாமி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
உண்மைகளைக் கண்டறிய, மு.க. ஸ்டாலின் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருப்பதைக் கலைத்துவிட்டு, நாடறிந்த நடுநிலையாளராக இப்போது பதவியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயக் கொள்ளை - கொலைகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவை அமைத்துவிட்டு முதலமைச்சர் பதவியிலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகி, தன்னை மு.க. ஸ்டாலின் அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரியலூர் தொடர்வண்டி விபத்து 1956 -ஆம் ஆண்டு ஏற்பட்டு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தபோது, அப்போது அத்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் 300 க்கும் மேற்பட்டோரைக் காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது. அதைக் கண்டித்து அப்போது ஒன்றிய அரசில் காங்கிரசு அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியமும், ஓ.வி. அளகேசனும் பதவிவிலகினார்கள். அவர்களைப் பின்பற்றி மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
அடுத்து, முற்றிலும், நிரந்தரமாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளைமூடவேண்டும்.
20-6-2024
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: அறிக்கைகள், கள்ளச்சராய_படுகொலைகள், டாஸ்மாக், மதுவிலக்கு, மதுவிலக்கு!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்