"50 ஆவது மொழிப் போர் ஆண்டு -- தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன...?" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
Friday, January 16, 2015
"50 ஆவது மொழிப் போர் ஆண்டு -- தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன...?"
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
ஐம்பதாண்டுகள் ஓடிவிட்டன. 1965-இல்
தமிழகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்;
சற்றொப்ப பத்துத் தமிழர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர்.
பல்லாயிரக் கணக்கானோர் சிறையிலடைக்கப் பட்டனர். விசாரணையின்றி சிறையில்
வைக்கும் தடுப்புக் காவல் சட்டப்படி சிலர் சிறையிலடைக்கப் பட்டனர்.
இந்தித்
திணிப்பை எதிர்த்து ஐம்பது நாட்கள் நடந்த இம்மாபெரும் போராட்டத்தை
முன்னின்றும் தலைமை தாங்கியும் நடத்தியவர்கள் மாணவர்கள். தமிழகத்திலும்
இந்திய அரசிலும் காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்தது. தமிழகத்தில் பக்தவத்சலம்
முதலமைச் சர்; இந்தியாவில் லால் பகதூர் சாத்திரி தலைமை அமைச்சர்.
அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் ஆற்றல்மிக்கத் தலைவராக காமராசர்
விளங்கினார்.
1950 சனவரி 26இல்
செயலுக்குவந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343 (1) பிரிவின்படி,
சமற்கிருத எழுத்து வடிவத்தில் உள்ள இந்தி, இந்திய ஒன்றியத்தின் அலுவல்
மொழி. இச்சட்டம் செயலுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் வரை ஆங்கிலமும் ஒன்றிய
அரசின் அலுவல்மொழியாக நீடிக்கும் 343- (2). பதினைந்தாண்டுக் காலவரம்பிற்கு
மேலும் ஆங்கிலத் தின் பயன்பாட்டை நீட்டிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்
343 -_ 3 (ணீ).
மேலே கூறப்பட்ட
அரசமைப்புச் சட்டக்கூறு 343 _-3-(ணீ)இன்படி நாடாளுமன்றம் சட்டம் இயற்றா
விட்டால் 1965 சனவரி 26-க்குப் பின் இந்தி மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஒரே
அலுவல் மொழியாக இருக்கும். ஆங்கிலம் அலுவல்மொழி என்ற நிலை யிலிருந்து
விடுவிக்கப்படும்.
ஆங்கிலம் அலுவல்
மொழி என்ற நிலையிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு 1963-ஆம் ஆண்டு நாடாளு
மன்றம் இயற்றிய அலுவல் மொழிச் சட்டம் வழிவகுத் தது. ஆனால், 1963 அலுவல்
மொழிச் சட்டம் 1965 சனவரி 26-க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல்
மொழியாக நீடிக்கலாம் (னீணீஹ்) என்று இருந்தது. “மே” (னீணீஹ்) என்று
இருப்பதால் 1965- சனவரி 26க்குப் பிறகு ஆங்கிலம் நீடிக்கலாம்,
நீடிக்காமலும் போகலாம் என்ற ஐயம் எழுந்தது. இதற்காக 1963 முதல் இந்தித்
திணிப்பு எதிர்ப்பு மாநாடுகளைத் திராவிட முன்னேற் றக் கழகம் நடத்தியது.
இந்தித்
திணிப்பால் தமிழுக்கு வரும் கேடுகளைத் தி.மு.க. பெருமள வில் பரப்புரை
செய்தது. 1965 சனவரி 26 குடியரசு நாளை துக்க நாளாகக் கடைபிடித்துக்
கருப்புக் கொடிகளை ஏற்றப் போவதாக அறிவித்தது. குடியரசு நாளைத் துக்க
நாளாகக் கடைபிடித்துக் கருப்புக் கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று முதல்வர் பக்தவத்சலம் எச்சரித்தார்.
அதன்பிறகு,
தி.மு.க. பின்வாங்கி 1965 சனவரி 25ஆம் நாளைத் துக்க நாளாகக்
கடைபிடிப்பதென்றும் பொது இடத்தில் அல்லாமல் அவரவர் வீட்டில் கருப்புக் கொடி
ஏற்றுவது என்றும் அறிவித்தது.
மாணவர்களில்
பெரும்பாலோர் தி.மு.க.வினர் என்றாலும் காங்கிரசு மாணவர்கள் உட்பட பல்வேறு
கட்சிகள் சார்ந்த, கட்சிகள் சாராத மாணவர் களையும் இணைத்துக் கொண்டு பொது
நிலையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டத்தை முன் னெடுத்தனர்.
தி.மு.க.
மாணவர்கள் மட்டும் போராடவில்லை; காங்கிரசு மாணவர்களும் போராடுகிறார்கள்
என்பதைக் காட்டுவதற்காக காங் கிரசு மாணவர் இரவிச்சந்திரன் என்பவரை தமிழகம்
தழுவிய போராட்டத் தலைமைக் குழு விற்குத் தலைவராக அமர்த்தி னார்கள். ஆனால்,
அவர் கொஞ்ச நாட்களில் அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். பிறகு
தி.மு.க.வைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் விருதுநகர் பெ. சீனிவாசன் தலைவ
ரானார்.
நடைமுறையில் அப்போராட் டம் மாணவர் போராட்டம் என்பதைக் கடந்து மக்கள் போ ராட்டமாக தமிழர் போராட்ட மாக விரிவடைந்தது.
1965
சனவரி 25இல் இந்தித் திணிப்பை எதிர்த்து கருப்புப் பட்டை அணிந்து மாணவர்
பேரணிகள் நடத்த வேண்டும் என்று மாணவர் அமைப்பு முடிவு செய்தது. தமிழகம்
முழுக்க அப் பேரணிகள் நடந்தன. மதுரை யில் பேரணியில் வந்த மாணவர்களைக்
காங்கிரசுக்காரர்கள் தாக்கிப் படுகாயப்படுத்தினர். மாணவர்கள் குருதி
சொட்டச் சொட்டப் பேரணியில் சென்றனர். பின்னர் மருத்துவ மனையில் சேர்க்கப்
பட்டனர்.
இந்தச் செய்தி அன்று (25. 01.
1965) மாலை வானொலியில் தெரி விக்கப்பட்டது. இதைக் கேட்டுத் தமிழகம்
முழுவதும் மாணவர்களும் உணர்வாளர்களும் கொந்தளித் தனர். மறுநாள் 26. 01.
1965 காலை 10 மணிக்கு சிதம்பரத்தில் அண் ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள்
காங்கிசாரின் காட்டு மிராண்டித் தனத்தைக் கண்டித்துப் பேரணியாகப் புறப்
பட்டனர். தொடர்வண்டி வாயில் (ரெயில்வே கேட்) அருகே மாணவர்களை காவல் துறை
யினரும் கோட்டாட் சியரும் தடுத்தனர். “இன்று குடியரசு நாள். நாளைக்கு
கண்டனப் பேரணி நடத்திக் கொள்ளுங்கள்; அனுமதி தருகிறோம்” என்றனர்
அதிகாரிகள். மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மறுநாள்
காலை மாணவர் ஊர்வலம் புறப்பட்டு வந்தபோது, அதே தொடர்வண்டி வாயில் கதவை
அடைத்து ஊர்வலத்தைத் தடுத்தனர் அதிகாரிகள். மாணவர் கள் அவர்களின் தடையை
மீறி ஊர் வலமாகப்புறப்பட்டனர். அப்போது, தமிழகக் காவல்துறையினர்
துப்பாக்கியால் மாணவர்களைச் சுட்டனர். சிவகங்கை யைச் சேர்ந்த காவலர்
(போலீஸ்) ஒருவரின் மகன் மாணவன் இராசேந்திரன் மார்பில் குண் டேந்தி
மடிந்தார். இன்னொரு மாணவர் படுகாயமுற்றார்.
இந்தச்
செய்தி வானொலி மூலம் மக்களுக்குப் போனது. தமிழகம் கொந்தளித்தது. உண்மையான
மொழிப்போர் தொடங்கியது. அரசு அலுவலகங்கள் இயங்காமல் முடக்
கப்பட்டன.தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டன. கடையடைப்புகள் நடந்தன.
26.
01. 1965 விடியற்காலை சென் னை கோடம்பாக்கம் திடலில் “உயிர் தமிழுக்கு உடல்
தீக்கு” என்று எழுதி வைத்துவிட்டு, சிவலிங்கம் என்ற இளைஞர் தீக்குளித்து
மடிந்தார். 27. 01. 1965 விடியற்காலை சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு மடல்
எழுதி வைத்துவிட்டு அரங்க நாதன் என்ற இளைஞர் தீக் குளித்து தழல் ஈகி ஆனார்.
இவ்விருவருக்கும்
முன்னோடி யாக, தமிழகத்தின் முதல் தழல் ஈகியாக 1964 சனவரி 25ஆம் நாள்
விடியற்காலை திருச்சி தொடர் வண்டிச் சந்திப்பு நிலைய வாயில் எதிரில்
கீழப்பழூர் சின்னச்சாமி என்ற இளைஞர் “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று
முழக்கமிட்ட வாறு தீக்குளித்து மடிந்தார். 1965இல் அடுத்தடுத்து கீரனூர்
முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி,
மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி எனப் பலரும் தீக்குளித்தும், நஞ்சுண்டும்
மடிந்தனர்.
1965 பிப்ரவரி 9, 10 ஆகிய
நாட் களில் தமிழகமெங்கும் அஞ்சல் நிலைய மறியல் போராட்டங்கள் என்றும் 11
அன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் என்றும் 12 அன்று தமிழகம் தழுவிய பொது
வேலை நிறுத்தம் என்றும் மாண வர் போராட்டக் குழு அறிவித்தது.
1965
பிப்ரவரி 10ஆம் நாள் _- இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொலைக் களங்களையும்,
பிணக் குவியல்களையும் கண்ட நாளாகும். மாணவர்களுடன் பொது மக்களும் சேர்ந்து
போராட்டங்களில் ஈடு பட்டனர். இராணுவம் இறக்கப் பட்டது.
திருப்பூர்,
பொள்ளாச்சி, குமார பாளையம் மூன்று இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள்
சுட்டுக் கொல்லப் பட்டனர். சரக்குந்துகளில் பிணங்களை ஏற்றிச் சென்றனர்.
தமிழகம் முழுக்கப் பல்வேறு ஊர்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. மொத்தமாக
முந்நூறு பேர்களுக்கு மேல் தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று
அம்மொழிப் போரில் மாணவராய் கலந்து கொண்டவரும், பின்னர் காரைக் குடி அழகப்பா
பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றவரும், ஆய்வாளருமான
பேராசிரியர் முனைவர் அ. இராம சாமி, “என்று முடியும் இந்த மொழிப் போர்?”
என்ற நூலில் எழுதியுள்ளார்.
கள
ஆய்வுகள், அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உள்ளிட் டோரிடம் நேர்காணல்,
அக்காலத் தில் வந்த ஏடுகளில் செய்தித் திரட்டல் எனப் பலவகைகளில் செய்தி
திரட்டி இந்நூலை எழுதி யுள்ளார். இந்நூலை சிறந்த தமிழ்ப் பற்றாளரான மதுரை
அனல் விவே கானந்தன் அவர்கள் முதலில் வெளி யிட்டார்கள். இப்போது பூம்புகார்
பிரசுரம் மறுபதிப்புச் செய்துள்ளது.
மொழிப்
போரை ஒடுக்கு வதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்திட ஆணை பெற்று வந்த இராணு
வத்தினரிடையிலும், காவல் துறை யினரிடையிலும் இன உணர்ச்சி பீறிட்டது.
கோவையில்
துப்பாக்கிச் சூடு நடத்தியது இராணுவம். ஒரு சிறுவன் பலியானான். கூட்டம்
சிதறியது. பிணமாகக் கிடந்த சிறுவனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு
சீருடையுடன் கையில் துப்பாக்கியுடன் ஓர் இராணுவ வீரன் அழுது புலம்பினான்.
“எந்தத் தமிழன் பெற்ற பிள்ளையோ இப்படிப் பலியாகிவிட்டாயே!” என்று பலரறிய
அழுதான்!
மதுராந்தகம் காவல் நிலையத்
தில் காவல் அறையில் அடைக்கப் பட்டிருந்த இந்தி எதிர்ப்பாளர்கள்
தப்பிவிடாமல் காவல் காத்த காவலர் புத்திரசிகாமணி என்பவர், தமிழுணர்ச்சி
மேலிட வீதியில் “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!” என முழங்கிக் கொண்டே ஓடி, அஞ்ச
லகத்திலிருந்த இந்தி எழுத்து களைத் துப்பாக்கியால் சுட்டார். அவர் கைது
செய்யப்பட்டு, இடை நீக்கம் செய்யப்பட்டார்.
நடுவண்
அரசில் அமைச்சர் களாக இருந்த சி. சுப்பிரமணியமும், ஓ. வி. அழகேசனும்
இந்தித் திணிப் பையும் அடக்குமுறையையும் கண் டித்துப் பதவி விலகினர். அனைத்
திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த காமராசர் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தை கொச்சைப்படுத்தி, கண்டனம் செய்து அறிக்கை எதுவும் விடவில்லை.
இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காலிகளின் போராட்டம், ரவுடி களின்
போராட் டம் என்று கொச் சைப்படுத்தி அறிக்கை விட்டார் பெரியார்.
தொடக்கத்திலிருந்து மாணவர் போராட்டத்தை அவர் எதிர்த்தார்.
திருப்பூரிலும்
குமாரபாளையத் திலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட
போது, பொது மக்கள் திரண்டு திருப்பூரில் ஒரு துணை ஆய்வா ளரை வண்டிச்
சக்கரத்தில் கட்டி எரித்துக் கொன்றனர். குமார பாளையத்தில் காவிரிப்
பாலத்தில் மாட்டிக் கொண்ட இரு காவல் துறையினர் மீது பாலத்தின் இரு
முனைகளிலும் திரண்ட பொது மக்கள் கல்லெறிந்தனர். உயிர் பிழைக்கக் காவிரி
ஆற்றில் குதித்த அவ்விருவரும் நீரில் மூழ்கி இறந் தனர். கூட்டம் கூட்டமாக
அப் பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டதால், மக்கள் கொடுத்த பதிலடி என்று
பார்க்காமல், “இனி மேல் திராவிடர் கழகத்தின் தோழர்கள் மண்ணெண்ணெய்
பாட்டிலும் தீப்பெட்டியும் வைத்துக் கொள்ளுங்கள். போராட்டக் காலிகளை
கண்டால் கொளுத் துங்கள்” என்று அறிக்கை வெளி யிட்டார் பெரியார்.
இதே
பெரியார், 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை
சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்தியைத் திணித்த
காங்கிரசுக் கட்சியை எதிர்த்தார் பெரியார். 1965 காலத்தில் தி.மு.க.வை
ஒழிக்க வெறி கொண்டு செயல்பட்ட பெரியார், காங்கிரசை ஆதரித்தார். மாணவர் கள்
உள்ளிட்ட முந்நூறு தமிழர் கள் -சுட்டுக் கொல்லப்பட்ட போது காவல்
துறையினரின் அட்டூழியத் தை பெரியார் கண்டிக்க வில்லை. காங்கிரசுக்
காரர்களான சி. சுப்பிர மணியமும், ஓ.வி. அழகேசனும் காட்டிய அளவுக்குக்கூட
அரசின் மீதான எதிர்ப்புணர்வை பெரியார் காட்டவில்லை.
பெரியாரின் இந்நிலைபாட்டை தி.மு.க. எதிர்ப்பு என்பதோடு சுருக்கி விட முடியாது. தமிழ் எதிர்ப்பும் அதில் சேர்ந்துள்ளது.
“நான்
1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்தது, இந்திக்குப் பதிலாகத் தமிழ்
வேண்டும் என்ப தற்காக அல்ல. இந்திக்குப் பதிலாக ஆங்கிலம் வேண்டும் என்பதற்
காகத்தான்; தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று நான் நாற்பதாண்டு களாகச்
சொல்லி வருகிறேன்;” என்று பெரியார், தி.மு.க. ஆட்சியை ஆதரித்த காலத்திலும்
1968, 1969 ஆண்டுகளில் அறிக்கை கொடுத் துள்ளார். இவையெல்லாம் விடுதலை
ஏட்டில் வந்துள்ளன; ஐயா ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா.
சிந்தனைகள் தொகுப்புகளிலும் உள்ளன.
இன்னொரு
பக்கம், பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல் லிக் கொள்ளும் தி.மு.க.
தலைவர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி வரை இந்த மொழிப் போராட்டத்தில்
நடந்து கொண்ட முறை வெட்கப்படத் தக்கவை. ஒரு கட்டத்தில் அண்ணா, “மாணவர்
நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தி.மு.க.வுக்கும்
தொடர்பில்லை” என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்தித்
திணிப்பை எதிர்த்த அண்ணாவின் பேச்சுகள், எழுத்து கள், கலைஞர் கருணாநிதி
உள் ளிட்ட தி.மு.க. தலைவர்களின் பேச்சுகள், எழுத்துகள், தி.மு.க. நடத்திய
மாநாடுகளில் போட்ட தீர்மானங்கள் ஆகியவற்றால் உணர்ச்சி பெற்ற மாணவர்களும்
இளைஞர்களும்தாம் இந்தி எதிர்ப் புப் போராட்டத்தின் கள நாயகர் கள் களப்
போராளிகள்.
இராணுவத்தையும் காவல்துறை
யினரையும் பிணங்களின் மேல் நின்று கொண்டு மக்கள் எதிர்க்கும் போராட்டமாக -
மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக இந்தி எதிர்ப்புப் போர் வடிவம்
கொண்டபின், தி.மு.க. தலைவர்கள் அப்போராட் டத்தைக் கண்டு அஞ்சினர்; பின்
வாங்கினர். போராடும் மாணவர் களை, -போராடும் மக்களை தி.மு.க. தலைவர்கள்
கைவிட்டனர். உருப் படியான தலைமை இல்லாத போராட்டமாக - அது நடந்து முடிந்
தது! அப்போதும், போராட்டத் தைக் கைவிடச் சொல்லி விடிய விடிய நுங்கம்பாக்கம்
வீட்டில் வைத்து மாணவர் தலைவர்களை வலியுறுத்தினார் அண்ணா. இந்த மாபெரும்
இந்தி எதிர்ப்பு எழுச்சி யைப் பயன்படுத்தி இந்திய அரசுக்கு நெருக்கடி
கொடுத்து உருப்படியான உறுதிமொழி எதையும் பெற தி.மு.க. தலைவர்கள்
முன்வரவில்லை.
ஐம்பது நாட்களுக்குமேல்
போ ராட்டம் தொடர்ந்தது. தலைமை அமைச்சர் லால் பகதூர் சாத்திரி வானொலியில்
பேசி, ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாகத் திணிக்க
மாட்டோம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு வாக்குறுதி கொடுத்து போராட்டத்தைக்
கைவிடுமாறு வேண்டுகோள் விட்டார். மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அசாமில்
மாணவர்கள் வெளி யாரை எதிர்த்துப் பெரும் போ ராட்டம் நடத்தினார்கள். இறுதி
யாகத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தியுடன் அசாம் மாணவர் தலைவர்கள் பேச்சு
நடத்தி உடன்பாடு கண்டு, ஒப் பந்தத்தில் கையப்பமிட்டு போராட்டத்தை
முடிவுக்குக் கொண்டு வந்தனர். அவ்வாறெல் லாம் உறுதியான _- தெளிவான வழி
காட்டல் தரும் தலைமையாக தி.மு.க. செயல்படவில்லை.
போராடிய
மாணவர் தலைவர் களுக்குத் தெளிவான கோரிக்கை வைக்கவும் தெரியவில்லை.
இக்கட்டு ரையை எழுதும் நான், 1965-இல் திருக்காட்டுப்பள்ளி உயர் நிலைப்
பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி
மாணவர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் இந்தி
எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக இருந்து செயல்பட்டேன்.
செங்குட்டுவன் என்ற நண்பர் போராட்டக் குழுவின் தலைவராக இருந்தார். இந்தி
எதிர்ப்புப் பேரணியின்போது, எனது இந்திப் புத்தகம் தான் கடைத்தெரு
முச்சந்தியில் எரிக்கப் பட்டது.
நாங்கள்
தமிழைக் காக்கத்தான் போராடினோம். ஆனால், தமிழ்க் காப்பிற்கான மொழிக்
கொள்கை எங்களிடம் இல்லை. இந்தி வேண் டாம் ஆங்கிலம் வேண்டும் என்பது தான்
இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின் நடுநாயகக் கோரிக்கை. ஆங்கிலத்தை அறவே
நீக்குவதாக அரசமைப்புச் சட்டமும் கூற வில்லை; 1965இல் இயற்றப்பட்ட அலுவல்
மொழிச் சட்டமும் கூற வில்லை. அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 15
ஆண்டுகளுக்குப் பின்னும், அதாவது 1965க்குப் பின்னரும் இந்தியுடன்
ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பதுதான் 1963 அலுவல் மொழிச்
சட்டம். “நீடிக்கலாம் _- னீணீஹ்” என்று ஆங்கிலத்தில் உள்ளதை “sலீணீறீறீ
நீடிக்கும்” என்று திருத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கோ ரிக்கை.
அதுதான் மாணவர்களின் மையக் கோரிக்கை! இதற்குத்தான் இவ்வளவு பெரிய மொழிப்
போராட்டம்.
உலகில் எங்கும் காணாத அளவுக்கு தாய்மொழி காக்க முந் நூறு பேரைப் பலி கொடுத்த போராட்டம் இது!
இடையிடையே
தமிழ் உள் ளிட்ட 14 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் ஆக்க
வேண்டும் என்று அண்ணா பேசு வார். அவ்வளவுதான் வரையறுக் கப்பட்ட தெளிவான
மொழிக் கொள்கை எதுவும் இன்று வரைக் கும் தி.மு.க.விற்குக் கிடையாது.
தி.மு.க.வுக்கே
தெளிவான மொழிக் கொள்கை இல்லாத போது, அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட
மற்ற கட்சிகளைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது? கடைசியில் இராசாசியின்
மொழிக் கொள்கை தி.மு.க.வின் மொழிக் கொள்கை ஆனது. ‘ழிமீஸ்மீக்ஷீ பிவீஸீபீவீ;
ணிஸ்மீக்ஷீ ணிஸீரீறீவீsலீ’ - “ஒரு போதும் இந்தி வேண்டாம், எப்போதும்
ஆங்கிலம் வேண்டும்!” என்பதே அது. இதில், தமிழுக்கு எங்கே இடம் இருக் கிறது?
அலுவல்
மொழிச் சட்டத்தில் 1967இல் செய்த திருத்தத்தின் வழி தி.மு.க. கோரிய
ஷிலீணீறீறீ-லையும் காங்கிரசு ஆட்சி போட்டுவிட்டது. காலவரம்பு
வரையறுக்கப்படாமல் இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்.
இவ்வளவுக்குப்
பிறகு இந்தித் திணிப்பு எவ்வாறுள்ளது? 1965-இல் 1970-இல் இருந்ததைவிடப் பல
மடங்கு அதிக அளவிலும் தீவிர முனைப்புடனும் இந்தி தமிழ் நாட்டில் திணிக்கப்
படுகிறது. நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. கூட்டணி சேர்ந்தப் பிறகு தமிழகத்
தில், “தேசிய” நெடுஞ்சாலைகளில் _ -பரவலாக இந்தி வழிக்குறிப்புகள்
இடம்பெற்றுள்ளன.“தேசிய நெடுஞ் சாலை”த் துறை அமைச்சராக இருந்தவர்
தி.மு.க.வின் டி.ஆர். பாலு!
1967-தேர்தலில்
தி.மு.க. தமிழக ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்தி எதிர்ப்பு ஈகிகளும்,
போராட்டங் களும் தாம் படிக்கட்டுகளாக இருந்தன. ஆனால் தி.மு.க. ஆட்சி பீடம்
ஏறியப் பிறகும் இந்திப் பாடம் நீக்கப்பட வில்லை. கல்லூரி களில் தேசிய
மாணவர் படைப் பயற்சி (ழிசிசி) யில் இந்திக் கட்டளைச் சொற்கள் நீக்கப்பட
வில்லை. அண்ணா முதல்வராக இருந்தாலும், இந்தி நீக்கப்பட வில்லை என்பதற்காக,
1967-இல் மீண்டும் மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் எழுந்தது. உடனடியாக
அண்ணா வாக்குறுதி அளித்தார்.
அதன்படி,
1968 - சனவரியில் சட்டப் பேரவையில் இரு மொழிக் கொள்கையை அறிவித்தார்.
இந்திப் பாடம் பள்ளிகளிலிருந்து நீக்கப் பட்டது. கல்லூரிகளில் என்.சி.சி.
நீக்கப்பட்டு, நாட்டு நலப் பணித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அண்ணா
கொண்டுவந்த இரு மொழித் திட்டத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. முதல்
பிரிவில் தமிழ் அல்லது ஏதாவ தொரு இந்திய மொழி என்று கூறப் பட்டது.
தமிழ்
மொழி கட்டாயப் பாட மில்லை. ஆனால், இரண்டாவது பிரிவில் உள்ள “ஆங்கிலம்”
கட்டாயப் பாடம். முதல் பிரிவில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி விட்டு,
இரண்டாவது பிரிவில் ஆங்கிலம் அல்லது ஏதாவதொரு அயல் மொழி என்று வைத்திருக்க
வேண்டும். அவ்வாறான தாய் மொழிக்கு முதன்மைதரும் மொழிக் கொள்கை
தி.மு.க.விடம் இல்லை.
ஆங்கில மோகத்தை
வளர்த்த கட்சி தி.மு.க. . 1965 மொழிப் போரை இந்தித் திணிப்பு எதிர் தமிழ்
என்று நடத்துவதற்கு மாறாக, இந்தித் திணிப்பு எதிர் ஆங்கிலத் திணிப்பு என்று
மாற்றியது தி.மு.க.
அடுத்து,
இந்தியாவுக்கொரு இணைப்பு மொழி தேவை என்ற காங்கிரசின் கொள்கையைத் தி.மு.
க.வும் ஏற்றுக் கொண்டது. அந்த இணைப்பு மொழி இந்தி_யா அல்லது ஆங்கிலமா
என்பதில் தான் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே முரண்பாடு எழுந்தது.
வளர்ச்சியடைந்த
பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டில் அவற்றுள் ஒரு மொழியை இணைப்பு
மொழியாக்கும் வழக்கம் உலகில் பெரும்பாலும் இல்லை. அவ்வாறு ஒரு மொழியை
இணைப்பு மொழியாக்கினால் அந்த மொழி மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும்;
அந்த மொழி பேசும் இனம், ஆதிக்க இனமாக வளரும். இதைத் தவிர்க்கவே பொது மொழி
_- இணைப்பு மொழி என்ற பெயர்களில் ஒரு மொழியைக் கொண்டு வருவதை சனநாயக
உணர்வுள்ள நாடுகள் ஏற்பதில்லை.
அடுத்து,
மொழி என்பது ஓர் இனத்தின் தாய் மொழியாக - ஒரு தாயக நிலப் பகுதியின்
மொழியாக விளங்குகிறது. மொழி - தேசிய இனம் - தாயகம் இம்மூன்றும் பிரிக்க
முடியாதவை.
தமிழகம் தமிழர்களின்
தாயகம், தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனத் தவர் என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் ஏற்கவில்லை. காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ச.க. போன்றவையும்
தமிழர்களைத் தனித் தேசிய இனமாகவோ, தமிழ் நாடு தமிழர்களின் தாயகம் என்ப
தாகவோ ஏற்கவில்லை. இந்தியர் _- இந்தியா _ என்ற ஒற்றை வடிவத் திற்குள்
அடங்கிய மொழிச் சிறு பான்மையினர்; பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதுதான் மேற் படிக் கட்சிகளின் நிலைபாடு.
எனவே,
அவை இந்தி - ஆங்கிலம் _ பிராந்திய மொழி என்று மும் மொழிக் கொள்கையை இந்தி
பேசாத மாநிலங்களில் திணிக் கின்றன; இந்தி மாநிலங்களுக்கு மும் மொழிக்
கொள்கை கிடையாது.
தி.மு.க. போன்ற
திராவிடக் கட்சிகளோ இந்தியா _ திராவிடம் _ தமிழ்நாடு என்ற மூன்று நாடுகள்
அல்லது தேசங்கள் கொண்ட கருத்தியலை முன்வைத்தவை. அவை இந்தித் திணிப்பை
எதிர்த் தாலும் ஆங்கிலத் திணிப்பில் நிலை கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில்
உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களான வங்கி கள், அஞ்சலகம், வருமான வரித் துறை,
தொடர்வண்டித் துறை, வாழ்நாள் ஈட்டுறுதிக் கழகங்கள் போன்றவற்றில் ஆங்கிலம்
அல்லது இந்தி அலுவல் மொழியாக இருக்க வேண்டிய தேவை என்ன வந்தது? அவை
அனைத்தும் தமிழில்தான் இயங்க வேண்டும்.
அனைத்திந்தியத்
தலைமையகத் திற்குக் கணக்கு அனுப்பும் போது, ஆங்கிலத்தில் அனுப்பினால் போ
தும். அது அந்த அலுவலகத்தின் மொத்த வேலைப் பளுவில் ஐந்து விழுக்காடு
இருந்தால் அதிகம். அந்த ஐந்து விழுக்காடு மட்டுமே ஆங்கிலத்தில் இருக்க
வேண்டும். மற்ற தெல்லாம் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
இப்பொழுது
மேற் கண்டவற் றில் தொடர்வண்டித் துறையைத் தவிர மற்றவற்றில் தமிழகத்தில்
வேலை யில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வெழுத வேண்டி யுள்ளது. இந்த
அநீதியை நீக்கி, தமிழில் மட்டுமே தேர்வெழுதும் முறையைக் கொண்டு வர வேண்
டும்.
எனவே, மும்மொழிக் கொள்கை இந்தி _ஆங்கிலம் இரண்டையும் தமிழ்நாட்டில் திணித்துத் _ தமிழை -_ தமிழர்களை வீழ்த்தும் மொழிக் கொள்கையாகும்.
இருமொழிக் கொள்கை என்பது ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழை, தமிழர்களை வீழ்த்தும் கொள்கை யாகும்.
ஒரு
மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே கட்டாய மொழிப் பாடமாக
இருக் கும்; பயிற்று மொழியாக இருக்கும்; தமிழக அரசின், இந்திய அரசின்
அலுவலகங்களின் அலுவல் மொழி யாகவும், உயர் நீதிமன்றம் வரை வழக்கு
மொழியாகவும் இருக்கும்.
ஆங்கிலம்
அல்லது வேறொரு மொழி விருப்பப் பாடமாக இருக் கும். ஏதாவதொரு இரண்டாவது மொழி
கற்பது கட்டாயமாக இருக்கும். அது எந்த மொழி என்பதுதான் விருப்பத் தேர்வாக
இருக்கும். இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை மொழிகள் வேண்டும் என்பதை அவரவர்
விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக் கொள்ள லாம்.
மொழிப் போரின் 50ஆவது ஆண்டு விழாவில் - நாம் சரியான மொழிக் கொள்கையை முன்வைப் போம்.
1. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்றுச் சட்டமியற்ற வேண்டும்.
2. தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் அலுவலகங் களில் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.
3.
தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய மொழிப் பாடம்; கட்டாயப் பயிற்று மொழியாக
இருக்க வேண்டும். விருப்பப் பாடமாக ஆங்கிலம் அல் லது வேறொரு மொழியைப்
படிக்க லாம்.
4. தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கி இருப்பதை முற்றாகக் கைவிட வேண்டும்.
5. தமிழக வேலைவாய்ப்பில் உடனடித் திட்டமாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
6.
மருத்துவம் _- பொறியியல் போன்ற உயர் தொழிலியல் கல்லூரி களில் மாணவர்
சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க
வேண்டும்.
2015 முழுவதும் மொழிப் போரின் 50ஆவது ஆண்டு விழா வைக் கடைபிடிக்கும் வகையில் வேலைத் திட்டங்களை வகுத்துக் கொள்வோம்!
இந்திய
அரசின் இந்தித் திணிப் பும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்
முறியடிப்போம்; மக்கள்திரள் எழுச்சிகளை உரு வாக்குவோம். தக்க விளைவுகளை
உண்டாக்குவோம்! இக்கடமை களை நிறைவேற்றினால், மொழிப் போர் ஈகியருக்கு நாம்
உண்மை யான வீரவணக்கம் செலுத்தியவ ராகவும் நன்றிக் கடன் செலுத்தியவ ராகவும்
இருப்போம்!
Labels: கட்டுரைகள், தமிழ் மொழி உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்