"பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் கூடாரம் - ஆர்.எஸ்.எஸ்.ம் பா.ச.க.வும்" ---தோழர் மணியரசன் கட்டுரை.
Thursday, January 1, 2015
"பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் கூடாரம் - ஆர்.எஸ்.எஸ்.ம் பா.ச.க.வும்"
---தோழர் மணியரசன் கட்டுரை.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட் டிற்குள் மிகையாகக் குடியேறி, தமிழர்களின் தாயகத்தைத் தங்களின் தாயகமாக அவர்கள் மாற்றிக் கொள்வதைத் தடுக்கும் தற்காப்பு நோக்கில் 1956 நவம்பர் 1-க்குப் பின்வந்து குடியேறிய வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.
மக்கள் உரிமைக்காக நாம் நடத்தும் இந்த மனித உரிமைப் போராட்டத்தை பாசிசம் என்றும் இனவெறி என்றும் எதிரிகள் கூச்சல் போடுவதற்கு முன், தமிழினத்தைச் சேர்ந்த இன இரண்டகர்கள் சிலரே நம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பாரதமாதா பசனை பாடி இந்தியத் தேசியம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் “வெளியாரை வெளியேற்றும்” போராட்டத்தில் இறங்கியுள்ளதைத் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டும்.
பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் நிரஞ்சன் சோதி என்ற பெண் துறவி, “இராமருக்குப் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் இந்தியா சொந்தம். மற்றவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் நாட்டை ஆள்வதற்கு உரிமை இல்லை” என்று அண்மையில் பேசினார். நிரஞ்சன் சோதி அரசமைப்புச் சட்டத்திறகுப் புறம்பாகப் பேசியுள்ளார், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராடின. அதன் பிறகு அவர் ஒப்புக்கு வருத்தம் தெரிவித்தார். அமைச்சராக நீடிக்கிறார்.
பா.ச.க. உள்ளிட்ட பரிவாரங்களுக்குத் தலைமை தாங்கும் ஆரியப் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மையில் (21.12.2014) கொல்கத்தாவில் விசுவ இந்து பரிசத் விழாவில் பேசும்போது, வெளியார் சிக்கலைக் கிளப்பியுள்ளார்.
“நாம் அச்சப்படத் தேவையில்லை. நாம் நமது சொந்த மண்ணில் வாழ்கிறோம். நாம் வெளியி லிருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களோ, ஊடுருவியர்களோ அல்லர். இது நம் சொந்த நாடு; நமது இந்து தேசம். ஓர் இந்து தன்நாட்டைவிட்டுப் போக மாட்டான். கடந்த காலத்தில் எதை நாம் இழந்தோமோ, அதை மீட்க வேண்டும்”.
“இந்துக்கள் தலையெடுப்பதைக் கண்டுயாரேனும் அச்சப்பட்டாலோ அல்லது எதிர்த்தாலோ அவர்களோடு மோத வேண்டியதுதான். நாம் நடத்தும் மோதல், நம் முன்னோர்களுக்கு அவர்கள் இழைத்த தீங்குகளுக்கு எதிராகவே! நம் கடவுள் சொல்கிறார், எதிரி நூறு குற்றமிழைத்தால் அவனது எந்தக் குற்றத்தையும் மன்னிக்கக் கூடாது. இந்துக் களை யாரும் மதம் மாற்றக் கூடாது. நாம் மற்ற மதங்களில் உள்ளவர்களை இந்துவாக மாற்ற வேண்டும். அவர்களை அயல் மதங்கள் ஆசை காட்டி இழுத்துக் கொண்டன. கொள்ளைய டிக்கப்பட்ட நமது சொத்தை மீட்பதே அயல் மதங்களில் உள்ளவர்களை இந்துக்களாக மாற்றும் திட்டம். வலிமைமிக்க இந்து சமூகத்தைக் கட்டமைக்கப் போகிறோம்” ((Times of India, 21.12.2014).
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் மத மாற்றக் கருத்து, அவரது இந்து தேசியம் ஆகியவற்றைப் பின்னர் பார்ப்போம். ஆரியர்கள் மண் ணின் மக்கள் என்றும் முசுலிம்கள் வெளியிலிருந்து சட்ட விரோதமாக, ஊடுருவியர்கள் என்றும் மோகன் பகவத் கூறுவது பற்றிப் பார்ப்போம்.
வடமேற்கு இமயமலைப் பகுதியில் கைபர் கணவாய் வழி யாக சிந்துச் சமவெளி மண்டலத் திற்குள் மேய்ச்சல் சமூகமாக நுழைந்த வெளியினத்தார் ஆரியர்கள். நான்காயிரம் ஆண்டு களுக்கு முன் அவர்கள் அவ்வாறு நுழையும் போது, சிந்து ஆற் றிலிருந்து தென்குமரி வரை, நாகர் கோயிலிலிருந்து காசுமீரின் அனந்த நாக் வரை வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அரசு செலுத் தியவர்கள் தமிழர்கள். வெளி நாட்டாய்வாளர்கள் பலரும் இந்த உண்மையை வெளிப்படுத் தியுள்ளனர். கற்றறிவாளரான அம்பேத்கர் அவர்களும் இந்த வரலாற்றுண்மையைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ் மக்களிடமிருந்து நகர நாகரிக வாழ்வையும், மெய்யியல், வடமொழிக்கு எழுத்து வடிவம் போன்றவற்றையும் கற்றுக் கொண்டவர்கள் ஆரியர்கள். அவர்கள் கொண்டு வந்த பிரஜா பதி, பிரமன் போன்ற கடவுளர் கள் எடுபடாத நிலையில், தமிழர் களின் கருப்புத் தெய்வங்களான இராமன், கண்ணன் போன்ற வர்களைக் களவாடி, ஆரியமய மாக்கித் தமிழினத்திற்கு எதிராக நிறுத்தினார்கள்.
பல்வேறு இயற்கைப் பேரழி வுகள், போர்கள் காரணமாகத் தமிழர்கள், தென்னாட்டளவில் சுருங்கிப் போனார்கள். தமிழர் களின் சிந்துச் சமவெளி நக ரங்கள் அழிந்தன. அவற்றின் எச்சங்களாக இப்போது பாகிஸ் தானில் மொகஞ்சோதரோ, அரப்பா ஆகிய புதையுண்ட நகரங்கள் காட்சியளிக்கின்றன. வடநாட்டில் கங்கைச் சம வெளியில் ஆரியவர்த்தம் அமைத்துக் கொண்டார்கள் ஆரியர்கள்.
வடவாரிய மன்னர்கள் மீது போர் தொடுத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரி கால் பெருவளத்தான் எனப் பல மன்னர்கள் வடவாரிய மன்னர் களை முறியடித்தனர்; விரட்டி அடித்தனர். ஆனால், பின்னர் ஆன்மிகப் பரப்புரையாளர் களாக தமிழ் மன்னர்களின் தூதுவர்களாகத் தனி நபர் களாகத் தமிழ்நாட்டில் குடி யேறிய ஆரியர்கள் காலப் போக்கில் பெரும் எண்ணிக் கையில் புகுந்து இங்கு குடிமக்கள் ஆனார்கள்.
ஆனால், தமிழ் அறவோர்க்கும் சான்றோர்க்கும் இருந்த அந் தணர், ஐயர், பார்ப்பனர் என்ற தூய தமிழ் சிறப்புப் பெயர் களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு, தமிழ் மக்களோடு, உள்ளூர் மக்கள்போல் கலந்தனர். கிறித்துவத்தைப் பரப்பிடத் தமிழகம் வந்த ஐரோப்பிய பாதிரி மார்களான ராபர்ட் கால்டுவெல் - கால்டுவெல் ஐயர் என்றும், ஜி.யூ.போப் - போப்பையர் என் றும் பெஸ்கி - வீரமாமுனிவர் என்றும் பெயர் சூட்டிக் கொண் டதை ஒப்பிட்டால் ஆரியப் பிராமணர்கள் ‘ஐயர்’ ஆன கதை புரியும்!
தங்கிச் செல்வதற்கு மடத்தில் ஓர் இடத்தைக் கேட்டுப் பெற்ற பரதேசி பின்னர், அந்த மடத் தையே பிடுங்கிக் கொண்டது போல், ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையிலிருந்து தமிழர்களை வெளியேற்றினர்; கோயில்களி லிருந்து தமிழை வெளியேற்றி னார்கள். ”அறம் வளர்த்த நாயகி” என்று இறைவி பெயர் இருந் தால், அதைத் ‘தர்ம சம்வர்த்தினி’ என்று மாற்றினார்கள்.
“தீயாடியப்பர்” என்று இறைவன் பெயர் இருந்தால் அதை ‘அக்னீசுவரர்’ என்று மாற்றினார்கள். மயிலாடுதுறை என்று ஊர்ப் பெயர் இருந்தால் ‘மயூரம்’ என்று மாற்றினார்கள். திரு என்பதை ‘ஸ்ரீ’ என்று மாற்றினார்கள். பொங்கல் விழாவை சங்கராந்தி என்று மாற்றினார்கள்.தமிழர் களின் வானவியல்படி வகுக்கப் பட்ட ஆண்டுக் கணக்கு, மா தங்கள் அனைத்தையும் சமற்கி ருதத்தில் மாற்றினார்கள். கடைசியில் தமிழனைச் சூத்திரன், பஞ்சமன் என்றார்கள். தமிழச்சி யை சூத்திரச்சி என்றார்கள். தங்களை அந்தணர், ஐயர் என்று கூறி உயர்த்திக் கொண்டார்கள்.
பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் போல், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த கயவர்கள் போல் நடந்து கொண்ட இந்த யோக்கிய சிகா மணிகளின் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், யாரோ வெளியிலிருந்து வந்தார்களாம்; இவர்கள் மண்ணின் மக்களாம்.
கோரி முகமதும் கஜினி முகமதும் சோம நாதபுரம் கோயி லையும் மற்ற செல்வங்களையும் கொள்ளை அடித்தார்கள் என் பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் ஆரியத் தலைவர் களே, நீங்கள் தமிழர் களிடமிருந்து இந்தியாவையே கொள்ளை அடித்தவர்களாயிற் றே! நாங்கள் கோரி முகமது களையும், கஜினி முகமதுவையும் அறத்தின் அடையாளங்கள் என்று பாராட்டவில்லை. ஆயி ரம் கோரிகளும், கஜினிகளும் சேர்ந்தாலும் ஆரியக் கொள் ளைக்காரர்களுக்கு நிகராக மாட்டார்கள் என்கிறோம்.
தமிழர்களின் தோளில் உட் கார்ந்து கொண்டு தமிழர்களின் முகத்தைக் கடித்து விகாரப் படுத்தியவர்கள் நீங்கள்தான் ஆரியர்களே! நன்றி கொன்றவர் கள்; நயவஞ்சகர்கள். நீங்கள் வெளியார் ஆக்கிரமிப்பு பற்றிப் பேசுகிறீர்களா? தமிழர்களோடு தமிழர்களாக உங்களையும் இணைத்துக் கொண்டது தமி ழினம்! ஆனால், நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள். தமிழின அடையாளங்களை அழித்து, தமிழ் மொழியை அழித்து, சமற்கிருதத்தைத் திணித்தீர்கள்; சமற்கிருத அரங்கேற்றத்தின் அறிவிப்பாளனாக, கட்டி யங்காரனாக மணிப்பிரவாள நடையை உருவாக்கினீர்கள். இதையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தால் இந்த மண்ணும் விண்ணும் உள்ளவரை உங் களைத் தமிழினம் மன்னிக்கக் கூடாது. முசுலிம் போன்ற வெளியாரை மன்னிக்க முடியாது என்று மோகன் பகவத் பேசும் போது, பாதிக்கப்பட்ட நாங்கள் திருப்பிக் கேட்க மாட்டோமா?
தில்லைச் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதை இன் றைக்கும் எதிர்க்கிறார்கள், தீட்சி தர்கள். உயர்நீதிமன்றம் போய் அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டியதாய் இருக்கிறது. தில்லைக் கோயிலை தீட்சிதக் கும்பல் கட்டியதா? அல்லது தில்லை ஆட வல்லான் தீட்சிதர் தெய்வமா? கோயிலைக் கட்டி யவன் தமிழன் - கோயிலுக்குள் இருப்பவன் தமிழனுக்குரியவன்! ஆரியவர்த்தத்தில் தில்லைக் கூத் தரசன் போன்ற சிலையோ ஓவியமோ, வடிவமோ தெய்வமாக வணங்கப்படுகிறதா? இல்லையே!
இடையில் வந்த தரகர் கும்பல் அக்கோயிலை எங்களுக்குரியது; சூத்திரத் தமிழர்களுக்குச் சொந்த மில்லை என்கிறது. தமிழ்நாட் டில் பிறந்த ஆரியப் பார்ப்பன சுப்பிமணிய சாமி அரசுப் பொறுப்பிலிருந்த சிதம்பரம் கோயிலை உச்ச நீதிமன்றத்தின் மூலம் தீட்சிதர்களிடம் வாங்கிக் கொடுத்துவிட்டார். அனைவர்க் கும் பொதுவாகத் தில்லைக் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருந்தாலென்ன? தீட்சிதர்களை அர்ச்சனை செய்ய வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? இல்லையே! இந்து அறநிலையத் துறையில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனியாண்டவர் கோ யில், திருத்தணி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் எல்லாம் அழிந்து விட்டனவா?
“நானும் இந்து நீயும் இந்து” என்று பார்ப்பனர் சொல்வது சூழ்ச்சித் திட்டமாகும் என்று தமிழர்கள் ஐயுறுகிறார்கள். நீ இந்து என்பதும் உன்னைப் போலவே மற்ற தமிழர்கள் இந்து என்பதும் உண்மையானால், பொது நிலையில் இந்து அற நிலையத் துறையின்கீழ் தில்லை நடராசர் கோயில் இருப்பதில் என்ன குற்றம் வந்தது?
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை வைத்துப் போராடி, கடைசியில் சேதுக் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த இந் திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்திட்டம் செயலுக்கு வந்தால் தென்மாவட்ட இளைஞர் களுக்கு வேலை கிடைக்கும்; தமிழகப் பொருளியல் முன்னேற வாய்ப்புண்டாகும். இராமர் பாலத்தை இடிக்கப் போகி றார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பி அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது யார்? இதே பார்ப்பனக் கும்பல்தான்!
எப்பொழுதோ ஒரு காலத்தில் தமிழர் - ஆரியர் பகை இருந்தது; அது காலப்போக்கில் சரியாகி விட்டது; இரண்டு மக்களும் இணக்கம் கண்டு - தமிழ் மக்கள் என்ற தளத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்ற நிலை இன்றுவரை உருவாகவில்லை. நல்லிணக்கம் உருவாகாமல் போ னதற்கு யார் காரணம் தமிழகப் பார்ப்பனர்கள்தாம். பார்ப்பனர் களில் நூற்றுக்குத் தொண்ணூற் றைந்து பேர் தமிழர்கள் மீது குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்ற குறுகுறுப்பில்தான் இருக் கிறார்கள். ஆரிய இனப் பெருமிதங்களிலும் சமற்கிருதத் தின் சர்வ வல்லமைக் கித்தாப் புக்களிலும் மூழ்கிக் கிடக்கி றார்கள்.
தமிழீழத்தில் 2008---2009இல் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட் டார்கள். அப்போது, போர் நிறுத்தம் கோரித் தமிழ்நாட்டில் நடந்த பேரணிகளில், உண்ணாப் போராட்டங்களில் எத்தனை பார்ப்பனர்கள் கலந்து கொண் டார்களா? விரல்விட்டு எண்ணத் தக்க வகையில்தான் கலந்து கொண்டார்கள். விதிவிலக்காக, பார்ப்பனியத்தை மறுத்த பார்ப் பனர்கள் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.
தமிழர்களை இனப்படு கொலைச் செய்த இராச பட்ஷேக்கு பாரத ரத்னா விருது வழஙக“ வேண்டும் என்று தமி ழகத்தைச் சேர்ந்த பார்பன சுப்பிரமணியசாமிதானே கோரிக்கை வைக்கிறார். ஆரிய இனவாத இந்திய அரசு ஈழத் தமிழர் அழிப்புப் போரை பின் னாலிருந்து இயக்கியது. இனப் படுகொலைக் குற்றவாளி இராச பக்சே அரசு மீது பன்னாட்டு புலானய்வு கூடாது என்று ஆரிய இனவாத இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
சிங்களர்கள் ஆரியர்கள்; இந்திய அரசு ஆரிய இனவாத அரசு! இந்த இருத்தரப்பின ருக்கும் தமிழர்கள் இனப் பகைவர்கள்! எனவே போர் நிறுத்தம் கோரிய நிகழ்வுகளில் போராட்டங்களில் தமிழகப் பார்ப்பனர்கள் கணிசமாகக் கலந்து கொள்ளவில்லை. பிறகு, எங்கே “நீயும் .இந்து நானும் இந்து” வாழ்கிறது. இந்தியா விலுள்ள இலங்கைத் தூதர் கரிய வாசம் இலங்கையிலும் இந்தியா விலும் தமிழர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒரே இனம், ஆரிய இனம் என்று கூறுகிறார். இந்து மத்தில் ஆரிய இந்துவேறு; தமிழ் இந்து வேறு.
இஸ்லாம் மத்ததைச் சார்ந்த ஈரான் நாடும் ஈராக் நாடும் போரி புரிந்து கொள்ளவில்லையா?
இதோ சிரியாவிலும் ஒரே இஸ்லாம் மத்ததைச் சேர்ந்த சியாக்களும் சன்னிகளும் ஒரு வரை ஒருவர் அழித்துக்கொள்ள வில்லையா? அதுபோலத்தான் ஆரிய இந்துக்கள் தமிழ் இந்துக் களைப் பகைவர்களாக அடக்கி வைக்கப்ட வேண்டிய அடிமை களாகக் கருதுகிறீர்கள்!
பார்ப்பன வகுப்பில் பிறந்து தமிழின உணர்வோடும் சன நாயக உணர்வோடும் நடந்து கொண்ட நன் மக்களைப் பார்ப் பனர்கள் எப்படி நடத்தி னார்கள்? பெரும்பாவலர் பாரதி யார் சாதி மறுப்பாளர்; பறையர் வகுப்பிலே பிறந்த கனகலிங்கத் கைத் தன் குடும்பத்தில் ஒருவராக வைத்திருந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் போட்டு பிறவியில் சாதியில்லை என்று அறிவித்தார் பாரதியார். அதற் காகப் பாரதியாரை சாதி நீக்கம் செய்தார்கள் பார்ப்பனர்கள்.
கடையத்தில் தம் மாமியார் வீட்டுக்குப் போன போது பாரதியாரை அக்ரகாரத்தில் நுழையவிடவில்லை பார்ப் பனர்கள்.மனைவி அக்ரகாரத்தில் கணவன் ஊருக்கு வெளியே ஒரு பிள்ளையார் கோவிலில்! மதுரையில் வைத்தி யநாத அய்யர் ஒடுக்கப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி னார். அதற்காக வைத்திய நாதய் யரை சாதி நீக்கம் செய்தனர் பார்ப்பனர்கள்.
பிற்காலத்தில் பாரதியார், வைத்தியநாதய்யர் ஆகியோர் புகழின் உச்சிக்குப் போனபின் “எங்களவா” என்று உச்சி மோந்து கொள்கிறார்கள் பார்பபனர்கள். அவர்கள் புகழைத் திரையாகப் பயன்படுத்தித் தங்களது வர்ணா சிரம வெறியை மறைத்துக் கொள் ளும் உத்திதான் இந்த ஏற்பில் உள்ள கமுக்கம். பாரதியாரை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே உருமாற்றிவிட்டனர் பார்ப் பனர்கள்.
அண்மையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம், பா.ச.க.வின் அனைத்திந்தியச் செயலாளர் எச்.இராசா, பா.ச.க. தலைவர்களை இதே போல் இனியும், வைகோ பேசினால், அவர் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர முடியாது என்று கூறி மிரட்டினார். இந்த ஆண வம், இந்த வன்மம் ஆரிய ஆதிக் கத்தின் வெளிப்பாடு இல்லையா?
தமிழ்நாட்டில் பா.ச.க.வை வளர்க்க ஆர்.எஸ்.எஸ். தலை மையும் ஆரிய வர்த்தமும் தீவிர மாக இறங்கியுள்ளன. திருவள் ளுவர் விழா நடத்துவதெல்லாம் - தூண்டில் முள்ளில் வைக்கப் பட்ட மீனின் தீனி போன்றது. அரவணைத்து அழிக்கும் ஆரியப் போர் உத்தி அது!
பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் கடைந் தெடுத்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி! இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பு வெறியர். ஆர்.எஸ். எஸ்.ஸின் அதிகார ஏடான பாஞ்சசன்யத்தின் ஆசிரியராக இருந்தவர்.
பா.ச.க.வில் தமிழர்கள் சேர் வது மிகக் கொடிய இன இரண் டகமாகும். தமிழ்த் துரோகமாகும். பதவிக்காக, பணத்திற்காக இங் கேயும் சில வரதராசப் பெரு மாள்கள், டக்ளஸ் தேவானந் தாக்கள், கருணாக்கள் பா.ச.கவில் சேர்ந்துள்ளனர். அந்தக் கூட்டுக் குருவிகள் புதிய காட்டுக் குருவி களைப் பிடித்திடப் பயன்படும்! விவரம் தெரியாத அப்பாவிகள் சிலர் பா.ச.க.வில் சேரலாம். எப்படிச் சேர்ந்தாலும் பா.ச.க.வில் சேருவது, தமிழினத்தைப் பகை வனிடம் காட்டிக் கொடுக்கும் செயலாகும்!
பா.ச.க. மற்றுமொரு அரசியல் கட்சியன்று; தமிழினத்தின் அடையாளத்தை, பண்பை, இருப் பை அழிக்கத் துடிக்கும் ஆரியத் தலைமையின்கீழ் இயங்கும் கட்சி! பா.ச.க.வுடன் கூட்டணி சேரும் எந்தக் கட்சியும் தமிழினத் துரோகக் கட்சியாகும்!
நாம் ஒரே கட்சியில் இருந் தாலும், வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தோழன், மாமன், மச்சான், அப்பா, அம்மா, ஐயா என்று விளித்து அழைப்போம். ஆனால், இப் போது வடநாட்டு அமைப்பான பா.ச.க. ஒருவரை ஒருவர் “ஜி” என்று அழைத்துக் கொள்ளும் பழக்கத்தைப் புகுத்தி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்து, முசுலிம், கிறித்தவம் என எந்த மதத்திலிருந்தாலும் அனைவரும் தமிழர்களே! இவற் றிற்கிடையே உயர்வு தாழ்வு கிடையாது! வழிபாட்டுரிமை அனைவர்க்குமான பொது உரி மை!
ஒரு மதத்தில் உள்ளவர் கருத்தியல் அடிப்படையில், இன் னொரு மதத்திற்கு மாறலாம். அது தவறில்லை. ஆனால், மதமாற்றம் செய்வதற்குத் தனித்திட்டம் போட்டு இந்து மதத்தினர், முசுலிம் மதத்தினர், கிறித்துவ மதத்தினர் யார் செய்தாலும் சனநாயக ஆற்றல்கள் அம் முயற்சிகளை ஆதரிக்கக்கூடாது. மதம் மாற்றும் சித்து வேலை களில் எந்த மதத்தினரும் ஈடுபடக் கூடாது.
வெளிமதம் உள்நாட்டு மதம் என்ற பாகுபாடு எதுவும் தமிழ்த் தேசியத்தில் இல்லை. தமிழக மக்கள் பின்பற்றும் எல்லா மதங்களும் மண்ணின் மக்கள் மதங்களே!
1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் மட்டுமே வெளியார்கள்! மற்ற அனைவரும் அவர்கள் எந்தத் தாய்மொழி பேசினாலும் சம உரிமையுள்ள தமிழ் மண்ணின் மக்களே! ஆனால் நமது இந்த சமத்துவக் கொள்கையை குயுக்தி யாக தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்த ஆரியப் பார்ப்பனர் முயன்றாலும் மற்றவர்கள் முயன் றாலும் அது தமிழ்த் தேசத்திற்குச் செய்யும் துரோகமாகும். அப் போது, வெளுத்ததெல்லாம் பால் என்று கருதி தமிழ்த் தேசிய ஆற்றல்கள் ஏமாற மாட்டா!
தமிழர்களே, காலம் கடந் தாவது ஒன்றைப் புரிந்து கொள் ளுங்கள். அயலாரை அதிக எண் ணிக்கையில் தமிழ்நாட்டிற்குள் குடியேற அனுமதித்தால் என்ன அநீதிகளும் அடிமைத்தனங் களும் மண்ணின் மக்களுக்கு ஏற்படும் என்பதை ஒருகாலத்தில் ஆரியப் பார்ப்பனர்களை அதிக மாகக் குடியேற வைத்ததன் பலனைப் பார்த்தபிறகாவது புரிந்து கொள்ளுங்கள்; திருந் துங்கள்.
ஆரியப் பார்ப்பனிய ஆர்.எஸ். எஸ். - பா.ச.க. அயல் அமைப்பு களைத் தமிழ்நாட்டில் தனிமைப் படுத்துவோம்! புறக்கணிப்போம்! தமிழ்த் தேசிய உணர்வு கொள்வோம்; தமிழர்கள் ஒற்றுமை காப்போம்!
Labels: கட்டுரைகள், தமிழ்த் தேசியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்