<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"வாழ்த்தியோருக்கு வணக்கங்கள்!" --- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Saturday, May 11, 2024


===================================================== 

வாழ்த்தியோருக்கு வணக்கங்கள்!

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================================


பேரன்புடையீர்,
வணக்கம்! எனக்கு 77 அகவை நிறைவுற்று 78-இல் நேற்று - 10.5.2024-இல் அடி எடுத்து வைத்துள்ளேன். நேரிலும், அலைபேசியிலும், சமூக ஊடகங்களிலும் எனக்கு வாழ்த்துகள் வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம்போல் இவ்வாண்டும் என் பிறந்த நாளில் விடியற் காலையிலேயே என் கைபேசியை அணைத்து வைத்துவிட்டேன். தொலைபேசியில் வாழ்த்த முயன்று, முடியாமல் போன அன்பு உள்ளங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அலைபேசியை அணைத்து வைப்பதற்கான முதற்காரணம், வாழ்த்துகளைக் கேட்பதில் எனக்கொரு கூச்சம் இருப்பதுதான். அலட்சியமோ, ஆணவமோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது காரணம் என்னால் தொடர்ந்து ஒரு நாள் முழுக்கத் தொலைபேசியில் பேச இயலாது. களைப்பும், சோர்வும் வந்துவிடும்.

அரசியல் தலைவர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தமிழ்த்தேசியக் குடும்ப உறவுகள்-குழந்தைகள், தோழமை இயக்கங்கள்-அமைப்புகளின் தோழர்கள், எமது அரசியல் நிலைபாட்டில் மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்கள், தோழர்கள் மற்றும் சான்றோர்கள், பெரியவர்கள் எனப் பலரும் எனக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர். பாவலர்கள் பலர் வாழ்த்தி எழுச்சிக் கவிதைகள் வழங்கியுள்ளனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர்கள் எனது அரசியல் பயணம் பற்றி ஏற்கெனவே எடுத்த ஆவணப்படங்கள் மற்றும் காட்சிகளை ஊடகங்களில் மறு ஒளிபரப்பு செய்துள்ளனர்.

அனைவர்க்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றிகள் !

தமிழ்த்தேசியம், தமிழ்த்தேச இறையாண்மை என்ற இலக்கை நோக்கியே எஞ்சிய என் பயணம் தொடரும்! மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம், ஆணும் பெண்ணும் சமம், இதுவே தமிழர் அறம்!

பெ. மணியரசன்
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்