<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

*கமலஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து,* வன்முறையைத் தூண்டும் கன்னடர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் செய்வீர்!* ---- ஐயா பெ.மணியரசன் தலைவர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, May 27, 2025

*கமலஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து,*
வன்முறையைத் தூண்டும் கன்னடர்களைக் கண்டித்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வீர்!*
==============================
ஐயா பெ. மணியரசன்
தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள்: 28.5.2025
========================


கடந்த 24.5.2025 அன்று சென்னையில் நடந்த “தக் லைஃப்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அத்திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமாரைப் பாராட்டி கமலஹாசன் பேசினார். அப்போது, சிவராஜ் குமாரை உடன்பிறப்பு என்று உறவும் உரிமையும் கொண்டாடும் வகையில் பேசினார். தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று கூறி ஒரு குடும்ப உறவை வெளிப்படுத்தினார்.

அத்துடன் சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா என்றும் கூறினார்
ஆனால், உறவு நோக்கத்தில் புகழ்ந்து பேசிய கமலஹாசன் கன்னடத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டார் என்று கர்நாடகத்தில் கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் பெங்களூரிலும் மற்ற இடங்களிலும் கமலஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, தமிழர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்புவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று தமிழ் - தமிழர் எதிர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கன்னடத் தீவிரவாதப் போராட்டங்களை ஆதரிப்பது போல் கர்நாடகத்தின் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா, “கமலஹாசன் பேசியது தவறு; கன்னடத்தின் தொன்மை அறியாமல் பேசியுள்ளார். அவர் பேச்சு வலியை ஏற்படுத்தத்தான் செய்யும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் பி ஒய் விஜயேந்திரா கமலஹாசனைக் கண்டித்ததுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் கன்னடத் தீவிரவாதிகளின் தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரிக்கும் வகையில் பேசினார்.
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராசன் கமலஹாசனைக் கண்டித்துள்ளார். பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் அணிவரிசையில் தமிழிசை முன்வரிசையில் உள்ளார்.
கடந்த காலங்களில், காவிரிச் சிக்கலில் கன்னட இன வெறியர்கள் கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளை எண்ணிப் பார்க்கும்போது, இப்போதும் அதே போல் கர்நாடகம் வாழ் தமிழர்களுக்கு கன்னட வெறியர்களால் பேரழிவுகள் நேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
1991-இல் காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு போல் - செயல்பாட்டு அதிகாரம் படைத்தது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்ததற்காக, அதை எதிர்த்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தினார்கள். அப்போது கன்னட இனவெறியர்கள் கர்நாடகம் வாழ் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். கர்நாடகம் வாழ் தமிழர்களின் வீடுகள் - வணிக நிறுவனங்கள் முதலியவற்றைச் சூறையாடினர்; தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர்.

இதற்காக யாரும் கர்நாடகத்தில் தண்டிக்கப்படவில்லை.
அடுத்து 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் - காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து, பெங்களூரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த KPN பேருந்து நிறுவனத்தின் சொகுசு ஆம்னி பேருந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கினர்.
கர்நாடகத்தில் படித்துக்கொண்டிருந்த தமிழின மாணவர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த சரக்குந்து ஓட்டுநர் எனக் கண்ணில்பட்ட தமிழரையெல்லாம் அடித்து மண்டியிடச் செய்து, “காவிரி கர்நாடகத்திற்கே சொந்தம்” என்று சொல்லவைத்து காணொலி எடுத்து கன்னடர்கள் பரப்பியதைப் பார்த்தோம். இவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் கர்நாடக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை.
எனவே, இப்போது கமலஹாசன் பேச்சைத் - தவறாகச் சித்தரித்து - தமிழின எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் கன்னடனர்களை காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளே ஆதரித்து வருகின்றன.

கடந்த காலங்களில் கர்நாடகத் தமிழர்களை அனாதைகளாக விட்டு விட்டன தமிழ்நாட்டுக் கட்சிகள். இந்த முறை அப்படி நடக்க விடக்கூடாது. தமிழர் தற்காப்புணர்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே வளர்ந்துவரும் காலம் இது.
கமலஹாசன் பேச்சைத் தவறாகத் திரித்து, கண்டனப் போராட்டம் நடத்திவரும் கன்னடத் தீவிரவாதிகள் கடந்த காலம்போல் இப்போதும் கர்நாடகத் தமிழர்களைத் தாக்காமல் பாதுகாக்க தமிழ்நாட்டில் தமிழர்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 29.5.2025 முதல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். தஞ்சை தலைமை அஞ்சலகம் அருகே 29.5.2025 மாலை 4 மணிக்கு தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிடும் கன்னடர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
============================== 
 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்