<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது" தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Monday, March 16, 2015

"புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது" 
--தோழர் பெ.மணியரசன் பேச்சு.

(பழ.நெடுமாறன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசியதின் எழுத்து வடிவம்).

இந்நூல் அறிமுகக் கூட்டம் திருச்சி இரவி சிற்றரங்கில் 08.03.2015 அன்று திரு. பொன்னிறைவன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் கணேசமூர்த்தி, வழக்குரைஞர் த. பானுமதி, திறனாய்வாளர் வீ. . சோமசுந்தரம், திருவாவடுதுறை இளைய ஆதினகர்த்தர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் இந்திரஜித் உள்ளிட்டோர் உரை யாற்றினர்

நிறைவில், திரு. பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்புரை யாற்றினார். அங்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசியதின் எழுத்து வடிவம்

தமிழர்களுக்குத் தேவையான அறிவாயுதங்களாக அவ்வப்போது நூல்கள் எழுதி வழங்கி வருகிறார் ஐயா பழ.நெடுமாறன். மார்வாடிகள், குசராத்திகள் தமிழர் களின் தொழில் வணிகத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறார்கள். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று 1990களில் கூட்டாகப் போராடினோம்

அப்போது, “தமிழகம் : வந்தேறிகளின் வேட்டைக் காடா?” என்ற அருமையான நூலை எழுதித் தந்தார்கள்.
அதில் நபர் வாரியாக மார்வாடி - குசராத்திகள் தமிழ்நாட்டின் தொழில் - வணிகத்தில் யார் யார் ஆதிக்கம் செய்கிறார்கள், தமிழ்நாட்டிற்கு வரும் போது அவர்கள் எத்தகைய நிலையில் இருந்தார்கள். பின்னர் எப்படிக் கொழுத்தார்கள் என்ற விவரங்கள்,- பாரதியார் கவிதைகள் கூட மார்வாடியிடம் அடமானமாக இருந்து மீட்கப்பட்ட வரலாறு எனப் பல விவரங்களைத் தந்தார்கள்.

அதேபோல் காவிரிச் சிக்கல் எழுந்தபோது, தமிழக ஆற்றுநீர்ச் சிக்கல்களை எல்லாம் விவரமாக எழுதி நூலாக்கித் தந்தார்கள்.  “உருவாகாத இந்தியத் தேசிய மும் உருவான இந்து பாசிசமும்”என்ற அருமையான நூலையும் தந்தார்கள். அந்த வரிசையில் காலத்தை வென்ற காவிய நட்பு”என்ற இந்த நூலை வழங்கியுள்ளார்கள்

எழுநூறு பக்கங்கொண்ட இந்நூல் இந்திய - இரசிய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்தியா உருவாவதற்கு முந்தைய காலங்களில் இந்தோ - ஆரிய மொழிக் குடும் பத்தைச் சேர்ந்த சமற்கிருதம் - இரசிய மொழித் தொடர் புகள் - பழங்குடிகள் தொடர்புகள் தொடங்கி - இரசியப் புரட்சி கால உறவுகள் எனப் பலவற்றை இந்நூலில் தொகுத்துள்ளார்கள்

இந்தியா என்ற நிர்வாகக் கட்டமைப்பை வெள்ளையர்கள் உருவாக்குவதற்கு முன்பிருந்து இந்தப் பகுதி மக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. வெள்ளையர்கள் இந்தியாவை உருவாக்கிய பின்னரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சப்பானுக்கும் இன்னபிற நாடுகளுக்கும் இடையே உறவு இருந்தது.

இவற்றில் இந்திய - இரசிய நட்புறவை மட்டும் சிறப்பாக எழுத வேண்டிய தேவை என்ன? பொதுவுடைமைக் கொள்கையை - மனித சமத்துவக் கொள்கையை முதன்முதலாக செயல்படுத்திக் காட்டி யவர்கள் இரசியர்கள். அந்த மனித நேய - மனித சமத்து வக் கொள்கையின்பால் உள்ள மதிப்பு காரணமாகவே இந்திய - இரசிய நட்புறவைப் பாராட்டி, ஐயா அவர்கள் எழுதியுள்ளார்கள்.

இந்தியாவுக்கும் இரசியாவுக்கும் இருந்த தொடர்புகள், தமிழ்நாட்டிற்கும் இரசியப் புரட்சிக்கும் இருந்த தொடர்புகள் ஆகியவற்றின் வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. அந்த காலகட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் கலைக் களஞ்சியமாக இந்நூல் உள்ளது.

1857இல் வெடித்த சிப்பாய்க் கலகத்தின் கதா நாயகனாகக் கருதப்படும் நானா சாகிப் தலைமறை வான குறிப்புகள், -அவர் இரசியா செல்ல விரும்பினார் என்ற குறிப்புகள், அவர் எங்கு மரணமடைந்தார் அவரின் எலும்புகள் எங்கே கிடைத்தன என்ற விவரங்கள் இந்நூலில் உள்ளன.
பாலகங்காதர திலகர்தான் முதன் முதலில் இந்தியாவில் காரல் மார்க்ஸ் பற்றிப் பேசியவர் என்ற செய்தியும் இந்நூலில் உள்ளது. காரல் மார்க்ஸ் அவர்களின் சோசலிசக் கருத்துகளை 1885ஆம் ஆண்டு சனவரி முதல் தமது மராட்டா’இதழில் . . .

இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்டு சிங்காரவேலர் தான் என்ற செய்தியும் -சிங்காரவேலர்க்கும் - லெனினுக்கும் இடையே நடந்த கடிதப் போக்கு வரத்துகள் பற்றியும், இந்தியாவிலிருந்து இரசியா சென்றவர்களிடம் சிங்காரவேலர் நலமாக உள்ளாரா?” என்று லெனின் விசாரித்த செய்திகளும் இந்நூலில் உள்ளன.

இவை மட்டுமின்றி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் அரசியல் - சமூகவியல் - சிந்தனை வளர்ச்சிக்கு இரசிய நாடு எந்த அளவு ஊக்க ஆற்றலாக விளங்கியது என்பதை இந்நூல் மூலம் அறியலாம்.
பொதுவுடைமை பற்றி வ..சி.க்கு இருந்த புரிதலின் தொடக்க நிலை எப்படி இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

கல்வி, ஒழுக்கம், கடவுள் வழிபாடு, ஆற்று நீர், ஏரி நீர், பெரும்பாட்டை, பொதுக் கூட்டுறவு, காட்டில் வாழும் உயிர்கள், இராஜாங்க உத்யோகங்கள் முதலியன பொதுவுடைமைகள். ஒருவனுடைய செல்வம், குளத்து நீர், கிணற்று நீர், நடைபாதை, வீடு, வீட்டில் வாழும் உயிர்கள், சொந்த வேலைகள் முதலியன தனி உடைமைகள். பொது உடைமைகளில் யாவர்க்கும் சம உரிமை உண்டு. ஆதலால் அவற்றை ஒருவர் அனுபவிப்பதை மற்றொருவர் தடுக்கலாகாது. தனி உடைமைகளில் அவற்றின் சொந்தக்காரருக்கு மாத்திரம் தனி உரிமை உண்டாதலால் அவற்றை அவரவர் தவிர வேறொருவர் அனுபவிக்க முற்பட லாகாது”என்று 1927இல் வ..சி. பேசியிருக்கிறார்.

அன்றைய சூழ்நிலை என்பது விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் சரியாகப் பரவாத சூழ்நிலை என்றும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வேரறுக்கும் வேலைக்கே முதன்மை கொடுத்த சூழ்நிலை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். இதெல்லாம் நல்ல பதிவுகளாகும். முற்போக்கான ஒரு தத்துவம் முயன்று தவறிக் கற்றல் முறையில் வளர்ந்துள்ளது என்பதற்கான காலப்பதிவு இது.

அதேபோல வ..சி. அவர்கள், கடவுள் ஏற்பு ஒரு சமயக் கருத்தாவது போல், கடவுள் மறுப்பும் இன்னொரு சமயக் கருத்தாகும் என்று கூறிய சனநாயகப் பண்பையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

இரசியப் பொதுவுடைமைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பாரதியார், அதனை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கருத்தில் முப்பது கோடி சனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை”என்று பாடினார்.
இரசியாவின் தவறுகள்
தமிழக வரலாற்றில் சேர்ப்பதற்குரிய பல தரவுகள், செய்திகள், நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்நூல் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது.

இரசியாவின் சிறப்புகளை, அது நமக்களித்த பெருமைக்குரிய கருத்துகளை, உதவிகளை நன்றியோடு பாராட்டும் அதே வேளையில், இரசியாவின் தவறுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பிற்காலத்தில் இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தன் வழிகாட்டுதலுக்கேற்ப செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் தலைமை பீடம், இரசியா என்பதுபோல் நடந்து கொண்டது. இந்த அணுகு முறையால் இந்தியக் கம்யூனிஸ்ட்டு இயக்கம் பாதிக்கப்பட்டது. காங்கிரசு ஆட்சிக்கு ஒரு துணை ஆற்றல் போல் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை மாற்றியது இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி.
இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் சண்டையிட்டுக் கொண்டு, இந்தியக் கம்யூனிஸ்ட்டு இயக்கத்தில் அவை ஒவ்வொன்றும் தனக்கான தனி பிரிவு வைத்துக் கொண்டன.

இந்திராகாந்தி 1975-இல் நெருக்கடி நிலையை அறிவித்து, சனநாயக உரிமைகளை, மனித உரிமைகளைப் பறித்தார். அந்த நெருக்கடி நிலையை கம்யூனிஸ்ட்டு இரசியா ஆதரித்தது. அதனால் நெருக்கடி நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் ஆதரித்தது. அப்போது, இரசிய அதிபர் பிரஷ்னேவ் தில்லி வந்திருந்தார். சோசலிஸ்ட்டுத் தலைவர் மதுலிமாயி, பிரஷ்னேவைச் சந்தித்து, “நீங்கள் காங்கிரசாட்சியின் நெருக்கடி நிலையை ஆதரிப்பது சரியல்ல”என்றார். அதற்கு பிரஷ்னேவ், “நெருக்கடி நிலை பிற்போக்குச் சக்திகளுக்கு எதிரான முற்போக்கு நடவடிக்கை. “காங்கிரசுக் கட்சி, முதலாளியக் கட்சியல்ல. ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் மூலவடிவமாக இருந்த சமூக சனநாயகக் கட்சி போன்றதுதான். எனவே காங்கிரசுக் கட்சிக்கு இந்தியாவில் எதிர்க்கட்சி தேவை இல்லை”என்றார்.

தமிழீழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அந்த இரத்தத்தில் கைநனைத்தது இரஷ்யா. இவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது. ஈழ விடுதலைக்கானத் தலைமை ஈழத்தில்தான் இருக்க முடியும். அது தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதேபோல், தமிழ்நாட்டு விடுதலைக்கானத் தலைமை தமிழ் நாட்டில்தான் இருக்க முடியும். அது ஈழத்தில் இருக்க முடியாது. ஈழம், தமிழ்நாடு இரண்டிற்குமான பொதுத் தலைமையும், இருக்க முடியாது.

அழுதழுது பெற்றாலும் அவள் கருவுற்ற பிள்ளையை அவள்தான் பெற்றெடுக்க வேண்டும். செவிலி அல்ல. இப்படிப்பட்ட படிப்பினைகளையும் இரசியாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாறு எழுதும் ஆய்வாளர்கள், சாதாரண வாசகர்கள் அனைவர்க்கு மான செய்திகளின், தரவுகளின் களஞ்சியமாக காலத்தை வென்ற காவிய நட்பு”நூல் விளங்குகின்றது.

பக்கங்கள் : 708 + XVII
விலை : ரூ. 800.00
வெளியீடு :
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,
41-ஙி, சிட்கோ தொழிற்பேட்டை,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பேசி : 044-26241288

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்