<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தலைவர்களே, மோடி அரசின் கருணைக்குக் காத்திராதீர்! சல்லிக்கட்டு நடத்திடும் ஏற்பாடுகளில் இறங்குவீர் " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Thursday, January 12, 2017
==============================================
தலைவர்களே, 
மோடி அரசின் கருணைக்குக் காத்திராதீர்!
சல்லிக்கட்டு நடத்திடும் ஏற்பாடுகளில் இறங்குவீர்!
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==============================================

தமிழ்நாட்டு இளைஞர் அமைப்பொன்று, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்து, சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாகத் தீர்ப்பு வழங்குங்கள் அல்லது சல்லிக்கட்டு நடத்திட இடைக்காலத் தீர்வொனறு சொல்லுங்கள் என்று கேட்டது. அதனை ஏற்க, நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு மறுத்து விட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் முப்பது நாளில் அமைக்க வேண்டும், நான்கு நாட்களில் அமைக்க வேண்டும் என்று கெடு விதித்துக் கெடுபிடி செய்த தீபக் மிஸ்ரா அமர்வு, பின்னர் மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டத்தை ஊறுகாய்ப் பானைக்குள் போட்டு விட்டதை நாமறிவோம். 

தமிழர்களுக்கான உரிமையை – நீதியை மோடியின் முகம் பார்த்து முடிவு செய்யும் நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது. 

எனவே, தமிழர் மரபு விழாவான சல்லிக்கட்டு விளையாட்டை நடத்திட உச்ச நீதிமன்றம் – பொங்கல் விழாவை ஒட்டி – அவசரத் தீர்வொன்று தரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. 

தமிழ்நாட்டுத் தலைவர்களே, இனியும் சட்டவாதம் பேசி அரசியல் நடத்தாதீர்கள்! கோரிக்கைப் போராட்டம்ட நடத்திக் காலம் கடத்தாதீர்கள். 

இதோ, நம் இளந்தமிழர்களைப் பாருங்கள்! ஆண்களும் பெண்களும் - மாணவர்களும் மாணவிகளும் “தடைகளைத் தகர்த்து, சல்லிக்கட்டு நடத்துவோம்” என்று ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாடெங்கும் போராடுகிறார்கள். 

தலைவர்களே, உடனடியாக சல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யுங்கள். எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், தன்னளவில் அப்பணியில் இறங்கியுள்ளது. 

இன உரிமைக் களத்தில் எழுச்சி கொண்டுள்ள இளைஞர்களே, சல்லிக்கட்டு நடத்தித் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டுங்கள்!

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்