<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Wednesday, September 29, 2021

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"தமிழ் இந்து? ஆரிய இந்து?" மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த... ஐயா பெ. மணியரசன் அவர்கள்!

"தமிழ் இந்து? ஆரிய இந்து?"



மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்கள்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"தமிழ் இந்து தேவையா? ஆரியம் மீண்டும் வராதா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Monday, September 27, 2021

"தமிழ் இந்து தேவையா? 

ஆரியம் மீண்டும் வராதா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!"--- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, September 26, 2021


 மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்

அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது.

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே, நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels:

மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்  அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது. 

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது. 

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.  

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே,  நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் ! ஐயா பெ.மணியரசன் அழைப்பு!

Friday, September 24, 2021

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் !



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் அழைப்பு! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"சாதியை ஆதரிப்பது தி.மு.க.வா? தமிழ்த்தேசியமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Thursday, September 23, 2021

"சாதியை ஆதரிப்பது தி.மு.க.வா? தமிழ்த்தேசியமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Monday, September 20, 2021

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?"---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

Friday, September 17, 2021


 முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய

சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
===========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்
===========================================


வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைச்சராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613).

அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூகநீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை (முரசொலி - 17.9.2021).

உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறப்பித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச்சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.

1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராய நிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம் - பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ. ரெங்கநாத முதலியார், ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகியோர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப்படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.

நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.

முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின் முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.

சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021. இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்புரிமை இடஒதுக்கீடு ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)

உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும்.

அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்புரிமை இடஒதுகீடு விவரம்:

வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)

மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!

1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின்தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டு வந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.

சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரால் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.

வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முதலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ. சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில் வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.

சமூகநீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூகநீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

அதேபோல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இடஒதுக்கீட்டிற்கு முன்மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர். கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையான கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்ப்பனர்களுக்கு வரம்பு கட்டுவதாகவும், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்கக்கூடாது” - Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197 (சான்று : கி. வீரமணி, ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000).

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================== 

Labels:

முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? ஐயா பெ.மணியரசன்

Thursday, September 16, 2021



முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய 
சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது. 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைசராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613). 

அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)

உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறபித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.

1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப் படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.

நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.

முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின்  முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.

சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் செனை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021.  இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)

உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும். 

அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுகீடு விவரம்: 

வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)

மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!

1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.

சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.

வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில்  வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.

சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீட்டிற்கு முன் மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர்.கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையானக் கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்பனர்களுக்கு வரம்புகட்டுவதாகவும், பார்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க கூடாது.”

-Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197 
(சான்று:) கி.வீரமணி ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

 

Labels: , ,

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்" "பேசு தமிழா பேசு" வலையொளிக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்"


"பேசு தமிழா பேசு" வலையொளிக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

" இளையோரே எழுக!"--- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!

Wednesday, September 15, 2021


 இளையோரே எழுக!

======================
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!
=======================

விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்து நாளிதழ் (The Hindu 13.9.2021) வெளியிட்டிருந்தது.

“இப்போது, அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதேச்சாதிகாரம், மதவெறி போன்ற சீரழிவுகளை எதிர்த்து இளைஞர்கள் எழுக” என்று உணர்ச்சிமிகு உரையைத் தலைமை நீதிபதி ஆற்றி இருந்தார்.

தமிழ்நாட்டிலும் மீள் எழுச்சியை உருவாக்கத் தமிழ் இளையோர்க்கும் பொருந்துவதாக இவ்வுரை இருப்பதால், இதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

===================================
-பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================

சனநாயக உரிமைகள் என்று நம்மால் ஏற்கப்படுள்ளவை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும், இருண்ட நெருக்கடி நிலைக் காலத்திலும் ஆயிரமாயிரம் இளையோர், ஆதிக்கப் பெரும் புள்ளிகளை எதிர்த்து வீதிகளில் போராடியதன் விளைவால் பெற்றவை! தேசத்திற்காக, சமூகத்தின் மகத்தான நன்மைகளுக்காக, அவர்களில் பலர் தங்கள் உயிரை ஈகம் (தியாகம்) செய்தார்கள். பெரும் வருவாய் தரும் பணிகளை இழந்தார்கள்.

நாட்டின் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பயணத்தில் ஏற்படும் தடங்கல்களைக் களைய இளைஞர்களை நம்புங்கள். தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இழைக்கப்படும் அநீதிகளை இளையோர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவர்கள் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தன்னல மற்றவர்கள்; வீர தீரமானவர்கள்! தாங்கள் உண்மை என்று நம்பும் இலட்சியங்களுக்காக ஈகங்கள் செய்வார்கள். இப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற மனங்கள் – தூய நெஞ்சங்கள் தாம் நமது நாட்டின் முதுகெலும்புகள்!

இளையோரே, சமூகத்தின் நடப்புகளை சவால்களை நீங்கள் அறிந்து கொள்வது கட்டாயத் தேவை! நினைவில் நிறுத்துங்கள்; நாட்டில் ஏற்படும் எந்தப் பாதை மாற்றமும், எப்போதும் அதன் இளையோரிடம் வேர்கொள்கிறது. அவர்களின் பங்கேற்பால் நிகழ்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் முழுநிறைவான தேசத்தையும் சமூகத்தையும் கட்டி எழுப்புவது உங்களுக்கான பணி!

சமத்துவக் கொள்கையுள்ள நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ள மதச் சார்பின்மைக் கொள்கை, இந்திய விடுதலைப் போராட்ட நெருப்பில் புடம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கான மருந்துச்சீட்டு போல் மதச்சார்பின்மையைப் பேசியவர் விவேகானந்தர். மதத்தின் மெய்யான சாரம் அனைவர்க்குமான பொது நன்மை, சகிப்புத்தன்மை ஆகியவையே என்று உறுதியாக நம்பினார். மூடநம்பிக்கைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்டதாக மதம் இருக்க வேண்டும்.

இந்தியா மீள் எழுச்சி கொள்ள, இளையோரிடையே விவேகானந்தர் கோட்பாடுகள் குறித்த உணர்வுகளை ஊட்ட வேண்டும்!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
======================================

Labels:

இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்! ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Tuesday, September 14, 2021



இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை
தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத்தைக் கத்தரித்துக் கொலை செய்தார்கள். தமிழ்நாட்டிலோ நீட் தேர்வே கில்லட்டின் கொலைக் கருவி ஆகிவிட்டது.

சில நாட்களுக்கு முன் மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நேற்று (14.9.2021) அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடியைச் சேர்ந்த  மாணவி கனிமொழி, இன்று (15.9.2021) காட்பாடி அருகே தலையாரம்பட்டு என்ற ஊரைச்  சேர்ந்த மாணவி செளந்தர்யா என்று வரிசையாக நம் தமிழ்ப் பிஞ்சுகளை நீட் பூதம் விழுங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அண்ணாமலை வரை உள்ள ஆரியத்துவா வாதிகளுக்கு இவ்வுயிர்ப் பறிப்புகள் அதிர்ச்சியை அளிக்காது. அவர்கள் பாரதமாதாவுக்குக் கொடுத்த இரத்தப்பலி என்று உள்ளூர உவப்பார்கள். ஆனால் நாம் அனிதா தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 16 பிள்ளைகளை நீட் பூதத்தின் வாயில் கொடுத்து விட்டு அன்றாடம் துடிக்கிறோம்! இந்த நீட் கொலைகள் தொடர அனுமதிக்கலாமா?

தமிழ்நாடு அரசு 13.9.2021 அன்று, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வை நடத்தாமல் விலக்கு அளித்து, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது. பா.ச.க. தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தோர் ஆதரித்து, இந்த முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இதுபோல் சல்லிக்கட்டு உரிமைக்காகவும், நீட் தேர்வு விலக்குக்காகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளின் கதி என்ன? தில்லிக் காலனி ஆதிக்க அரசின் குப்பைத் தொட்டிக்குத்தான் அவை போயின.

இந்த சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு ஆளுநருக்குத்தான் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி வைப்பாராம், குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவை ஆய்வுக்கு அனுப்பி வைப்பாராம். மோடி – அமித்சா வகையறா முடிவு செய்வார்களாம்.

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கூட இந்தக் கொடுமை இல்லை. அப்போது மாநில சட்டமன்றத்தின் வசம் கல்வி அதிகாரம் இருந்தது. “குடியரசு” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் குடிகளின் அரசில் கல்வி, மாநில சட்டப் பேரவை அதிகாரத்தில் இல்லை.

புதிய ஆளுநராக ஆர்.என்.இரவி 18.9.2021 அன்று தமிழ்நாட்டில் பதவி ஏற்கவுள்ளார். இந்தியக் காவல் துறையில் உளவுப் பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆர்.என்.இரவி. ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருந்து, அம்மாநில மக்களிடம் கெட்ட பெயர் வாங்கித் தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்.
 
கடந்த காலப் பட்டறிவுகளிலிருந்து தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும், நீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் புதிய உத்திகளை வகுத்து நீட் தேர்வு விலக்கு முன்வடிவுக்கு இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புதிய ஆளுநர் பதவி ஏற்ற பின் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். ஒன்று அவர் கையொப்பம் இட்டு சட்டமாக அறிவிக்க வேண்டும். அல்லது கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டு நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமக்கு வந்த மூன்று நாளில் கையொப்பமிட்டு சட்டமாக்க வேண்டும். 2017-இல் சல்லிக் கட்டு சட்ட முன்வடிவைச் சட்டமாக்கிடக் கோரி தமிழர்கள் மெரினாவிலும் மாவட்டங்களிலும் இலட்சம் இலட்சமாய்- இரவு பகலாய்த் தொடர் போராட்டம் நடத்திய போது அவசரம் அவரமாகக் குடியரசுத் தலைவர் கையொப்பம் வாங்கி, சட்டமாக்கினார்கள்.

மேற்கண்ட முறையில் தமிழ்நாடு ஆளுநரும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டியதில்லை என்று விலக்களிக்கும் சட்ட முன்வடிவைச் சட்டமாக்கவில்லை என்றால் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி, இந்திய அரசுக்கு எதிராக, சனநாயக வடிவில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கு நூறு செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், சட்டமன்றத்தில் முன்வடிவு நிறைவேற்றியதோடு, தன் கடமை முடிந்து விட்டது என்று தி.மு.க. ஆட்சி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இதில், தி.மு.க.வைக் குறை கூறி மோடி ஆட்சிக்கு சேவை செய்யும் பணியில் அ.இ.அ.தி.மு.க. இறங்கக் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகள் ஆதரவை நீட்டுக்கு எதிராக ஒருங்கு திரட்ட முயல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு இந்திய அரசு ஒப்பம் அளிக்கும் வரையில், இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்