<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

Monday, April 29, 2024

ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன்
அவர்கட்கு வீரவணக்கம்!
==============================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இர=ங்கல்!
=============================

தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலை் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள் எனக்கு வரலாற்றுக் கொடைகள்!

தமிழீழத்தில் வங்கி அதிகாரியாக இருந்த கனகேந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இறங்கி ஈழவேந்தன் ஆனார். வேலையை இழந்தார். இலங்கையில் வாழ முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பாக உரையாற்றினார். நாங்கள் முன்மொழிந்த தன்னுரிமைத் தீர்மானத்தை ஆதரித்தார். பிராமணியம் குறித்து மறக்க முடியாத ஒரு கருத்தைச் சொன்னார். தமிழ்ச் சிவநெறியின் ஆன்மிகச் சான்றோர்களாகத் தடம் பதித்துள்ள திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. இத்தனைக்கும் ஞானசம்பந்தர் வடமா பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் என்றார்.

தமிழீழத்திற்கு சனநாயக வழிமுறைகளில் தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வந்த ஈழவேந்தன் அவர்களை, 2000ஆம் ஆண்டு திசம்பர் 4 அன்று, வாச்பாயி தலைமையிலான பா.ச.க. – தி.மு.க. கூட்டணி ஆட்சி, தமிழ்நாட்டை விட்டு – இலங்கைக்கு நாடு கடத்தியது. அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இலங்கைக்குச் சென்ற ஈழவேந்தன் அவர்கள், விடுதலைப்புலிகள் ஆதரவுடன் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தமிழீழத்தில் இயங்க முடியாத அளவுக்கு சிங்கள ஆதிக்க அரசின் கெடுபிடிகள் அவரை நெருக்கிய நிலையிலும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அவர் கனடா சென்று வாழ்ந்து வந்தார். அங்கு தமிழீழ விடுதலைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அங்கும் தனது இறுதிக் காலம் வரையிலும், முதுமையையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதியின், “பிம்ஸ்டெக் பேரழிவில் தமிழர் தாயகங்கள்” நூலின் அறிமுக நிகழ்வு, 2019இல் கனடாவில் நடந்தபோது, அதில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

தமிழ்நாட்டின் தனித்தமிழ் – மொழியியல் அறிஞர் – பேராசிரியர் - முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள் ஈழவேந்தன் அவர்களின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் உள்ளார்கள்.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங்கி வாழாமல் தமிழினம், தமிழ் மொழி, தமிழீழம் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, இறுதிவரை ஈகவேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இல்லத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , ,

"கூடலூரில் பள்ளி மேலாண்மைக் குழுவினரை குடிபோதையில் தாக்கிய தி.மு.க.வினரைக் கைது செய்ய வேண்டும்!"------- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டன அறிக்கை!

Monday, April 1, 2024


கூடலூரில் பள்ளி மேலாண்மைக் குழுவினரை

குடிபோதையில் தாக்கிய
தி.மு.க.வினரைக் கைது செய்ய வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
=====================================


நீலகிரி மாவட்டம் – கூடலூரில், பந்தலூர் வட்டத்திலுள்ள தேவாலா கிராமத்தில் (அட்டி), அங்குள்ள தேவாலா ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், பொது மக்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமென அப்பள்ளின் தலைமை ஆசிரியர் திருமதி. வசந்தகுமாரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. இராஜாமணி, கற்றல் தொடர்பு மையம் (Learning Links Foundation - LLF) தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல்பாட்டாளர் ஆசிரியர் பா. தமிழ்ச்செல்வன் ஆகியோர், நேற்று (31.03.2024) மாலை 4 மணியளவில், ஒரு குழுவாகச் சென்று, தேவாலா அட்டி பாலமுருகன் கோயில் அருகில் வீடு வீடாகத் துண்டறிக்கைகள் வழங்கி, விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டனர்.

அந்த நேரத்தில் அங்கு குடிபோதையில் வந்த தி.மு.க. வார்டு கவுன்சிலர் திரு. ஆலன், தி.மு.க. கவுன்சிலர் திருமதி. யோகேசுவரியின் கணவர் திரு. செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர், அரசுப் பள்ளியில் சேருங்கள் என இக்குழுவினர் வழங்கிய துண்டறிக்கைகளை படித்துக் கூடப் பார்க்காமல், அ.தி.மு.க.வுக்கு இவர்கள் வாக்குக் கேட்பதாகக் பொய்க் குற்றம்சாட்டி அடித்துத் துன்புறுத்தி யுள்ளனர்.

தேவாலா பகுதியில் தி.மு.க. பிரமுகர் இராயன் என்பவருக்குச் சொந்தமாக உள்ள பி.ஆர்.சி.சி. (PRCC’) தார் ஆலை நச்சுக்கழிவை வெளியேற்றி வந்தது. அந்த ஆலையை மூட வேண்டுமென்று மக்கள் நடத்திய அறப்போராட்டத்திற்கு பகுதிநேர ஆசிரியர் பா. தமிழ்ச் செல்வன் ஆதரவாக இருந்தார் என்ற காழ்ப்புணர்வுடன் இருந்த தி.மு.க.வினர், அவரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

மாவட்டக் கல்வித்துறையின் சுற்றறிக்கை்கு ஏற்ப வீடு வீடாகச் சென்று மாணவர் சேர்க்கைக்கு வேண்டுகோள் துண்டறிக்கைகள் வழங்கிய தமிழ்ச்செல்வனைத் தாக்கி, அவரது சட்டையைக் கிழித்ததுடன், அவரது நெஞ்சின் மீது கீறல் விழும் வகையில் அவரை அடித்துத் தள்ளியுள்ளனர். கடுமையான வார்த்தைகளில் இழிவுபடுத்திப் பேசியுள்ளனர். அவரது ஏ.டி.எம். கார்டு மற்றும் கையிலிருந்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றையும் தி.மு.க.வினர் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பறித்த கைப்பேசியை மட்டும் மீண்டும் அளித்துள்ளனர்.

தாக்கப்பட்ட ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு வந்த தேவாலா காவல் நிலையக் காவலர்களிடம் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். இத்தனைக்கும் இவற்றுக் கெல்லாம் அப்பகுதி மக்களே சாட்சியாக உள்ளனர். ஆசிரியர் தமிழ்ச்செல்வன் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தி.மு.க.வினர் தாங்களும் தாக்கப்பட்டதாக ஒரு பொய்ப் புகார் அளிக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆளுங்கட்சியினரான தி.மு.க.வினர் ஆசிரியர்கள் மீது நடத்தியிருக்கும் இத்தாக்குதல் மீது காவல்துறை உரிய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும், காவல்துறையின் மேலதிகாரிகள் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்