"மன்னை தோழர் ரெ.செயபாலன் மறைவு பெருந்துயரம்!" -- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்!
Tuesday, January 18, 2022
=======================================மன்னை தோழர் ரெ.செயபாலன் மறைவு பெருந்துயரம்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்!
=======================================
ரெ.செ.என்றும் ரெ.செ.பாலன் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தோழர் ரெ.செயபால் அவர்கள் இன்று (18.1.2022) செவ்வாய்க் கிழமை முற்பகல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் காலமானார் என்ற கொடுஞ் செய்தி பேரதிர்ச்சி தருகிறது.
சிறுநீரகப் பாதிப்பால் சிகிச்சை (டயாலிஸ்) பெற்று வந்த தோழர் ரெ.செ.அன்றாடப் பணிகளைப் பாரத்து வந்தார். ஆனால் திடீரென்று இறந்து விட்டார் என்ற செய்தி பெருந் துயரம் தருகிறது.
இளமையில் இருந்து திருத்துறைப்பூண்டி தோழர்களுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி) இணைந்து பம்பரமாய்ச் சுழன்று பணிகள் செய்தார். திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளராகத் திறம்படச் செயல்பட்டார் தோழர். ரெ.செ.
மன்னார்குடி வந்த பிறகு அக்கிளையின் செயலாளராகச் செயல்பட்டார்.
மனிதச் சமநிலை, தமிழ்த்தேசியக் கொள்கை ஆகியவற்றில் உறுதியுடன், உணர்வுடன் செயல்பட்டவர் தோழர் ரெ.செ. அதிகம் அகவை ஆகிடவில்லை.
தோழர் ரெ.செ.பாலன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கும் – தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கும் பேரிழப்பாகும்.
தோழர் ரெ.செ.பாலன் அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் ரெ.செ.குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்குறிப்பு: இறுதி ஊர்வலம் 19.1.2022 முற்பகல் மன்னார்குடியில் அசேசம் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
தொடர்புக்கு: செ.வசந்தன் (ரெ.செ.மகன்) 8190800236
====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================
Labels: இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்