<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"வேலிக் கருவையைக் காலி செய்வோம்! வெளியாரை வெளியேற்றுவோம்!" --- பெ. மணியரசன் தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Friday, February 10, 2023


வேலிக் கருவையைக் காலி செய்வோம்!

வெளியாரை வெளியேற்றுவோம்!
================================
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================


“அகற்ற வேண்டிய சீமைக் கருவேலம்” என்ற தலைப்பில் தினமணியில் (9.2.2023) தமிழ்த்துறை ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஓர் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். சீமைக் கருவேல மரம் என்பது வேலிக் கருவை. அதனைத் தமிழ்நாட்டில் மீண்டும் தளிர்க்காத வகையில் வேரோடு அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் - அதன் மதுரை அமர்வு உட்பட பலமுறை ஆணை இட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் அதில் உரிய அக்கறை காட்டிச் செயல்படவில்லை.

பயன்தரும் பல்வேறு மரபு வழிப்பட்ட செடிகொடிகளையும் மரவகைகளையும் வளரவிடாமல் தடுத்துவிட்டன வேலிக் கருவை மரங்கள். வேலிக்கருவை தழைத்த இடங்களில் அம்மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் கூட தும்பை, துளசி, நாயுருவி, ஆவாரை போன்ற நன்மருந்துச் செடிகள் வளர்வதில்லை என்பதை எனது ஊர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பார்திருக்கிறேன். இதோ குடவாயில் கூறுகிறார்:

“(சீமைக்கருவேல) வேர்களின் அமைப்பே இதன் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்துள்ளது. மிகுந்த ஆழத்தை நோக்கிச் செல்லும் வேர்களையும், பக்கவாட்டில் நெடுந்தூரம் படர்ந்து பரவும் வேர்களையும் கொண்டுள்ளது. 30 மீட்டர் ஆழத்திற்கும் 1.2 மீட்டர் ஆழத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பரவி நீரை உறிஞ்சிக் கொள்ளும். இப்பகுதியில் வேறு செடிகள் வளர இயலா நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் இதனை ‘நீர்தேடி’ (வாட்டர் சீக்கர்) எனக் கூறுவர். ஒரு கிலோ தாவரப் பொருளை உருவாக்க 1,370 கிலோ நீரை சீமைக்கருவேலம் செலவிடுகிறது” என்று குடவாயில் கூறுகிறார்.

பாசன ஏரிகள், கண்மாய்களில் இந்த வேலிக்கருவை மண்டி, தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டன. பாசனநீர் இல்லாததால் வயல்கள் தரிசாகக் கிடக்கின்றன. அவ்வயல்களில் வேலிக்கருவை மண்டிவிடுகின்றது என்கிறார் குடவாயில். இவையெல்லாம் எல்லா மக்களும் கண்டு கொண்டிருக்கும் காட்சிகள்தாம்.

வெளிநாட்டிலிருந்து இந்த வேலிக் கருவையை ஆர்வமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்த செய்தியையும் சுருக்கமாகக் குடவாயில் சொல்லிஇருக்கிறார்.

“இதன் தாயகம் வடஅமெரிக்கா. சீமைக்கருவேல மரத்தின் தாவர இயல் பெயர் ‘புரோசாபிஸ் ஜூலிபுளோரா’. இது மைமோசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்காவிலிருந்து இது 1813-இல் ஹவாய், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்குப் பரவத் தொடங்கி, 1876-இல் இந்தியாவிற்குள் நுழைந்தது.

“லெப்டினன்ட் கர்னல் ஆர். எஸ் பெட்டோம் என்பவர் பிரேசிலில் இருந்து வட இந்தியப் பாலைவனப் பகுதிகளுக்கு இதைக் கொண்டு வந்தார். எம்.எஸ். சிவராமன் என்ற வேளாண்துறை இயக்குநர் முயற்சியால் சீமைக் கருவேலம் தமிழ்நாடு முழுவதும் பரப்பப்பட்டது” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

இப்போது தமிழ்நாட்டில் பல தன்னார்வ அமைப்புகள் வேலிக்கருவை அழிப்பு ஆக்கத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன; அது போதாது. ஒவ்வொரு ஊரிலும், நகரிலும் வேலிக்கருவை அழிப்புப் பணிகளில் மக்கள் இறங்க வேண்டும். அதேவேளை, நமது மரபுவழித் தாவரங்களை அங்கெல்லாம் வளர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி நடந்தபோது 1950 களில் வேலிக்கருவை விதைத்தூவல் பெருமெடுப்பில் நடந்தது என்று பெரியோர் சொல்வர்.

வெளிநாட்டிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வேலிக்கருவையை இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் கொண்டுவந்தவர்கள் நல்ல நோக்கத்துடன் கொண்டு வந்திருப்பார்கள்.

வெப்ப நாட்டிற்கேற்ற தாவரம்; அதிகம் மழை தேவைப்படாது. தானே மண்டிப் பரவும் என்ற நோக்கங்களில்தான் வேலிக்கருவையைக் கொண்டுவந்தார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின், பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற மண்டி நம்மண்ணின் மரபுவழி மருந்துத் தாவரங்களை – மரவகைகளை அழித்த பிறகுதான் – நீர்நிலைகளைக் காலி செய்த பின்தான், வேலிக்கருவையின் அழிவு வேலை நமக்குத் தெரியவந்தது. நீதித்துறையே தடை ஆணை போடும் அளவிற்கு அதன் அழிவுவேலை புரிந்தது.

இதே போல்தான் வெளி மாநிலத்தவர்கள் – இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் வந்து வேலைகள் பார்த்தபோது தொடக்கத்தில் – அவர்கள் வருகை நமக்குப் பேருதவி என்று பார்த்தோம். பல ஆண்டுகளாக அவர்கள் வந்து, அண்மைக்காலமாக வெள்ளம்போல் குவிந்த பிறகுதான் அவர்கள் நம்மவர்களின் – தமிழர்களின் தொழில், வணிகத்தைப் பறித்துக் கொண்டு, பெரும் முதலாளிகளாக, மொத்த வணிகர்களாக கொடிகட்டி வாழ்கிறார்கள். நம்மக்களின் வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டார்கள் என்ற அவலம் புரிந்தது.

இந்திய அரசு திட்டமிட்டு, தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் இந்திக்காரர்களையே வேலையில் சேர்க்கிறது; தமிழர்களைப் புறக்கணிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே இரண்டாந்தரக் குடிமக்கள் ஆனார்கள். தொழில் முனைவோர், வணிகர்கள் – தொழிலாளிகள் என அனைவருமே அயலார் – இந்திக்காரர்கள் – வடவர்கள்!

வேலிக்கருவையும் வெளியாரும் ஒன்றுதான்! வேலிக்கருவையைக் காலி செய்வோம்! வெளியாரை வெளியேற்றுவோம்!

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
================================

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்