"தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கிட உண்ணாப்போராட்டம் – 6-வது நாள் உயிர்காத்திட முதலமைச்சர் தலையிட வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
Monday, March 4, 2024
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கிட உண்ணாப்போராட்டம் – 6-வது நாள்
உயிர்காத்திட முதலமைச்சர் தலையிட வேண்டும்!
===================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் வேண்டுகோள்!

தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகச் செயல்படுத்த வலியுறுத்தி, வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் வழக்கறிஞர்களும் மற்ற தமிழ்மொழி உணர்வாளர்களும் 24 பேர் கடந்த 28.2.2024 முதல் சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கிற்கு அருகில் இரவுபகலாகத் தொடர் உண்ணாப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் இந்தக் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இன்றோடு (4.3.2024) ஆறு நாட்களாகத் தொடரும் இப்போராட்டத்தைத் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துவது வருத்தமளிக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 348(2) – “இந்தி அல்லது எட்டாவது அட்டவணையில் உள்ள மாநிலமொழி, அந்தக் குறிப்பிட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக இருக்கலாம். இதற்கு அம்மாநில அரசு கோரிக்கை அனுப்பி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். ஆனால் தீர்ப்பு மட்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்” என்று கூறுகிறது.
இந்த உறுப்பு அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கெனவே இந்தி மொழி இராசஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் அம்மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடும் மொழியாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் 6.12.2006-இல் திமுக ஆட்சி சட்டமன்றத்தில் நிறைவேற்றி 7.12.2006 அன்று தமிழ்நாட்டு ஆளுநரால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் வழக்காடு மொழித் தீர்மானத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தேவையின்றி உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அனுப்பிவைத்துக் கருத்துக் கேட்டது. அப்போது உச்சநீதிமன்றம் தமிழை அனுமதிக்கக் கூடாது என்று கருத்துக் கூறியது.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 348(2) மாநில உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அம்மாநில மொழியை ஏற்பதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலையோ அல்லது கருத்தையோ பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. உச்சநீதிமன்ற நிலைக்குழுவும், இதற்கு உச்சநீதி மன்றத்தின் கருத்தைக் கேட்கத் தேவை இல்லை என்று பலமுறை அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அப்போதிருந்த ஒன்றிய அரசின் காங்கிரசு ஆட்சி, தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டது.
ஒன்றியக் காங்கிரசு ஆட்சி உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாகாமல் தமிழைத் தடுக்க எடுத்த சட்ட விரோத நடவடிக்கையைக் கண்டித்து மீண்டும் அத்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குத் திமுக ஆட்சியும் அனுப்பவில்லை, அஇஅதிமுக ஆட்சியும் அனுப்பவில்லை.
இப்பொழுது, 24 பேர் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடர்கின்றார்கள். சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் அவர்கள் உண்ணாப் போராட்டத்தில் உட்கார்கிறார்கள். இந்த 24 பேரில் 90 அகவையுள்ள பெரியவர் குருசாமித் தமிழன் அவர்களும் நான்கு பெண்களும் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அஇஅதிமுக, காங்கிரசு, பாசக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, உடனடியாக சட்டப்பேரவையில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை ஆக்கிட வலியுறுத்தி, அரசமைப்பு உறுப்பு 348(2)-இன்படி தீர்மானம் நிறைவேறிறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறும், போர்க்கால அவசரத்துடன் செயல்பட்டு உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்குமாறும்கேட்டுக்கொள்கிறேன்.
புதிய சங்கரலிங்னார்கள் ஈகிகள் ஆவதைத் தடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
நாள்:(4.03.2024)
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: அறிக்கைகள், தமிழ்_உயர்நீதிமன்ற_மொழி, மொழி_உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்