<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"வைக்கம் விழாவின் தொடர்ச்சியாக... தமிழ்நாட்டுடன் கேரளம் கொண்டுள்ள நல்லுறவின் வெளிப்பாடாக முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்த அனுமதிக்க வேண்டும்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

Friday, December 13, 2024


வைக்கம் விழாவின் தொடர்ச்சியாக...

===============================
தமிழ்நாட்டுடன் கேரளம் கொண்டுள்ள
நல்லுறவின் வெளிப்பாடாக
முல்லைப்பெரியாறு அணையை
வலுப்படுத்த அனுமதிக்க வேண்டும்!
===============================
தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்
பெ. மணியரசன் வேண்டுகோள்!
===============================


கேரளத்தின் வைக்கத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் இரண்டும் 8.50 கோடி ரூபாய் தமிழ்நாட்டு நிதியில் புதுப்பிக்கப்பட்டு, 12.12.2024 அன்று அவற்றின் திறப்பு விழா நடந்தது. பாராட்டுகள்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் அவ்விழாவுக்குத் தலைமை தாங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவகத்தையும் நூலகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

அவ்விழாவில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், “கேரளாவின் பிரச்சினைகளில் தமிழ்நாடும், தமிழ்நாட்டின் பிரச்சினைகளில் கேரளமும் ஒருவருக்கொருவர் உதவும் வகையில், இரு மாநிலங்களும் கூட்டுறவு, கூட்டாட்சியின் உண்மையான உதாரணத்தை முன்வைக்கின்றன. வெறும் வார்த்தை ஒத்துழைப்பு இல்லாமல், செயலில் ஒத்துழைக்க வேண்டும். இது போன்ற ஒத்துழைப்பைப் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். (தினத்தந்தி, 13.12.2024).

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்குவதுபற்றிய கேரள-தமிழ்நாட்டுச் சிக்கலில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புக் சட்ட அமர்வு, நீதிபதி லோத்தா தலைமையில் 7.5.2014 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பில் இப்போது 136 அடி உயரம் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கிவரும் தமிழ்நாடு, அணை புதுப்பிக்கப்பட்டு வலுப்படுத்தப் பட்டுள்ளதால் இனி 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். முல்லைப்பெரியாறு அணையின் இணைப்பு அணையாக உள்ள சிற்றணையில் (Baby Dam) மிச்சமுள்ள வலுப்படுத்தும் பணிகளை முழுமையாகத் தமிழ்நாடு அரசு செய்து முடித்தபின் 152 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அந்த அணை வலுவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை தர வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. இப்பொழுதும் அந்த வல்லுநர் குழு அணையை ஆய்வு செய்து அவ்வப்போது அறிக்கை தந்து கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சிற்றணையை வலுப்படுத்தக் கட்டுமானப் பொருட்களை வல்லக்கடவு வழியாக ஏற்றிச் சென்ற, தமிழ்நாடு அரசின் ஊர்திகளை மறித்து, காவல்துறைப் பொறுப்பில் வைத்துக் கொண்டது கேரள அரசின் வனத்துறை! இன்றுவரை சிற்றணையை வலுப்படுத்தும் பணிகளைச் செயல்படுத்த விடாமல் தடுத்து வருகிறது கேரள அரசு! ஏற்கெனவே கேரளத்தில் காங்கிரசு ஆட்சியும் தடுத்தது. இப்போது பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட்டு ஆட்சியும் தடுத்து வருகிறது.

அடுத்து, மேற்படி சிற்றணையை வலுப்படுத்த அதன் அருகில் உள்ள சில மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கும் கேரள அரசும் அதன் வனத்துறையும் கடும் மறுப்புத் தெரிவித்து, சிற்றணையை வலுப்படுத்தும் திட்டத்தை முடக்கி வைத்துள்ளன.

அன்பு கூர்ந்து கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிற்றணையை வலுப்படுத்தி, முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு 152 அடி தண்ணீர் தேக்க வாய்ப்பளிக்குமாறு கனிவுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதுதான், வைக்கம் விழாவில் நீங்கள் பேசிய மாநிலங்களுக்கிடையிலான கூட்டுறவு – கூட்டாட்சி – ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கேரளம் கடைபிடித்து வழிகாட்டியதாக அமையும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருடன் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் சிற்றணைப் பகுதியை வலுப்படுத்தி 152 அடி தண்ணீர் தேக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்